‘மஹத் அய்யா ரொம்ப சவுண்ட் பார்ட்டியாக இருக்கிறார்’.. டிவிட்டரில் ஸ்ரீபிரியா விமர்சனம்
பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் பற்றி டிவிட்டரில் ஸ்ரீபிரியா விமர்சித்து பதிவுகள் வெளியிட்டுள்ளார்.
சென்னை: பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களைப் பற்றி நடிகையும், கமல் கட்சியின் முக்கிய பிரமுகருமான ஸ்ரீபிரியா விமர்சித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்ட திருடன் - போலீஸ் டாஸ்க் முடிந்து, பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது.
இதில் நாட்டாமையாக ஜனனி இருக்க, பொதுமக்கள் அனைவரும் மாறி, மாறி போலீசை குறை கூறுகின்றனர். இப்படியாக நிகழ்ச்சியின் விறுவிறுப்பைக் கூட்ட பிக் பாஸும் எவ்வளவோ முயற்சிகளை எடுத்து வருகிறார்.

விமர்சனம்:
இந்நிலையில், பிரபல நடிகையும், கமல் கட்சியில் முக்கிய அங்கம் வகித்து வருபவருமான ஸ்ரீபிரியா பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களின் மனநிலை குறித்து டிவிட்டரில் விமர்சித்து பதிவு வெளியிட்டுள்ளார். ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாக சின்னச் சின்னதாக அப்பதிவுகள் உள்ளன.

மும்தாஜின் கோபம்:
அதில், ‘இந்த நிகழ்ச்சி மூலம் நித்யாவுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து விட்டது போல் நினைக்கிறேன். ஆரம்பத்தில் இருந்த மும்தாஜ் தற்போது தன் அமைதியை இழந்து காணப்படுகிறார். முதலில் ஆக்ரோஷமாக இருந்த வைஷ்ணவி தற்போது அமைதியாகி வருகிறார்.
|
ரித்விகா:
மஹத் அய்யா ரொம்ப சவுண்ட் பார்ட்டியாக இருக்கிறார். . செண்ட்ராயன் ரொம்ப அப்பாவியாக இருக்கிறாரு. ரித்விகாவுக்கு சாமி ஆடவே தெரியவில்லை, மிகவும் சாப்டாக சாமியாடுகிறார்' என ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாக அவர் விமர்சித்துள்ளார்.

கமலுடன் பங்கேற்பு:
முதல் சீசனின் போதும் இதேபோல் போட்டியாளர்களை அதிகமாக விமர்சித்தவர்களின் ஸ்ரீபிரியாவும் ஒருவர். நிகழ்ச்சியின் இடையே ஒரு வாரம் கமலுடன் பிக் பாஸ் மேடையில் தோன்றி இது குறித்து அவர் விளக்கமாகவும் உரையாடியது நினைவு கூரத்தக்கது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications