சின்ன வயசுல இருந்தே யாஷிகாவுக்கு ‘அந்த’ கெட்டப்பழக்கம் இருக்காம்!
சிறுவயதில் இருந்தே திருடும் பழக்கம் இருப்பதாக யாஷிகா தெரிவித்துள்ளார்.
சென்னை: பிக் பாஸ் வீட்டில் திருடன் போலீஸ் டாஸ்கில் திருடியாக நடித்த யாஷிகா, சிறந்த போட்டியாளர் என்ற விருதைப் பெற்றார்.
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் திருடன் - போலீஸ் - பொதுமக்கள் டாஸ்க் விளையாடப்பட்டது. இதில் வீட்டில் உள்ளவர்கல் மூன்று குழுக்களாகப் பிரிந்து விளையாடினர். அதில் திருடர்கள் அணியில் டேனி, யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த டாஸ்கில் சிறப்பாக விளையாடிய திருடர்கள் அணி வெற்றி பெற்றது. அதோடு மனிதநேயத்தோடு நடந்து கொண்டதற்காக மற்ற போட்டியாளர்களிடம் இருந்து பாராட்டுகளையும் பெற்றது.

ஷாரிக் :
இந்நிலையில், நேற்று கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில், இந்த டாஸ்கில் சிறந்த போட்டியாளர் விருது யாஷிகாவிற்கும், மோசமாக போட்டியாளர் விருது ஷாரிக்கிற்கும் வழங்கப்பட்டது. முன்னதாக வெகு இயல்பாக விளையாடியதாக திருடர்கள் அணிக்கு கமல் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

பொம்மைகள் திருட்டு:
அப்போது பேசிய யாஷிகா, ‘சிறுவயது முதலே திருடும் குணம்' தனக்கு இருப்பதாக உண்மையைப் போட்டு உடைத்தார். குழந்தையாக இருந்தபோது, தன் வீட்டின் முதல் மாடியில் குடியிருந்த தோழி வீட்டில் இருந்து அதிக பொம்மைகளை அவர் திருடியுள்ளாராம்.

திட்டம் போட்டு திருடுற கூட்டம்:
தன் சகோதரியுடன் அவர்கள் வீட்டிற்கு விளையாடச் செல்லும் யாஷிகா, அங்கு தனக்குப் பிடித்தமான பொம்மையைத் தேர்வு செய்து கொள்வாராம். பின்னர் சகோதரிகள் சேர்ந்து திட்டமிட்டு அதனை தோழிக்குத் தெரியாமல் ஜன்னல் வழியே வெளியே வீசி விடுவார்களாம். அது மற்றவர்கள் கண்களுக்குத் தெரியாமல் செடிகளுக்கு இடையில் விழுந்து விடுமாம்.

நிறைய பொம்மைகள்:
பின்னர் கீழே இறங்கி வந்து அந்த பொம்மையை வீட்டிற்கு எடுத்துச் சென்று விடுவார்களாம். இப்படியாக அவர்கள் வீட்டில் நிறைய பொம்மைகள் உள்ளதாம். பாவம் அந்த அப்பாவித் தோழி இவர்கள் வீட்டிற்கு வரும்போது, இதே மாதிரி தன்னிடமும் பொம்மை இருப்பதாக அப்பாவியாகக் கூறுவாராம்.

சந்தேகம்:
அப்போதும் தான் திருடியதைச் சமாளிக்க, ‘நீ வாங்கிய அதே கடையில் தான் இந்த பொம்மையை நாங்களும் வாங்கினோம்' என யாஷிகாவும், அவரது சகோதரியும் கூறுவார்களாம். இதனை யாஷிகா கூறியதும், சக போட்டியாளர்கள் மற்றும் கமல் சிரித்தனர். ஆனால், இனி பிக் பாஸ் வீட்டில் சின்னக் குண்டூசி காணாமல் போனால் கூட, தன்னைத் தான் சந்தேகமாகப் பார்ப்பார்கள் என பாவம் யாஷிகாவிற்கு தெரியாமல் போய்விட்டது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications