பிக்பாஸ் 2: விலகாத தயக்கம்.. எனர்ஜி மிஸ்ஸிங்.. தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்ட "வைத்தி!

பிக்பாஸ் வீட்டில் மற்றவர்களுடன் சேராமல் தனித்து காணப்படுகிறார் அனந்த் வைத்தியநாதன்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பிக்பாஸ் 2: விலகாத தயக்கம்..எனர்ஜி மிஸ்ஸிங்..வீடியோ

    சென்னை: பிக்பாஸ் வீட்டில் தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டு காட்சியளிக்கிறார் போட்டியாளர்களில் ஒருவரான வாய்ஸ் எக்ஸ்பர்ட் அனந்த் வைத்தியநாதன்.

    பிக்பாஸ் வீட்டிற்குள் யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத், டேனியல், ஆர்.ஜே.வைஷ்ணவி, ஜனனியைத் தொடர்ந்து ஏழாவது போட்டியாளராக நுழைந்தவர் வாய்ஸ் எக்ஸ்பர்ட் அனந்த் வைத்தியநாதன்.

    விஜய் டிவியின் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான அனந்த் வைத்தியநாதன், பாலா இயக்கிய ’அவன் இவன்’ படம் மூலம் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.


    தனியே... தன்னந்தனியே:

    தனியே... தன்னந்தனியே:

    தற்போது விஜய் டிவியில் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி சென்றுக்கொண்டிருக்கும் நேரத்தில், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது பலரையும் ஆச்சர்யப் படுத்தியுள்ளது. ஆனால், வயதில் மூத்தவரான இவர், மற்ற இளம் வயது போட்டியாளர்களுடன் சேராமல் தனித்தே காணப்படுகிறார்.

     விலகாத தயக்கம்:

    விலகாத தயக்கம்:


    அறிமுக நிகழ்ச்சியின் போதே, ‘பல தயக்கங்களுக்குப் பிறகே இந்த நிகழ்ச்சிக்குள் வர வேண்டும் என நினைத்தேன்' என கமலிடம் கூறினார் அனந்த் வைத்தியநாதன். ஆனால், வீட்டிற்குள் சென்ற பிறகும் அவரது தயக்கம் இன்னும் விலகவில்லை என்பது அவரது நடவடிக்கைகள் மூலமே தெரிகிறது.

     கலகலப்பு மிஸ்ஸிங்:

    கலகலப்பு மிஸ்ஸிங்:

    வீட்டிற்குள் வந்த மற்ற போட்டியாளர்களும் அவரை வயதில் மூத்தவர் என்ற அடிப்படையில் மரியாதை செலுத்தினர். ஆனபோதும், முதல்நாளான நேற்றே கலகலப்பில்லாமல் கட்டாயத்தினால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது போன்ற தோற்றத்துடனே அனந்த் வைத்தியநாதன் காணப்பட்டார்.

    வெயிட் அண்ட் ஸீ:

    வெயிட் அண்ட் ஸீ:

    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போது காணப்படும் எனர்ஜி நேற்றைய நிகழ்ச்சியில் அவரிடம் மிஸ்ஸானது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் இந்த நிலை மாறுமா, இல்லை ஸ்ரீ போல் சில நாட்களிலேயே அவர் வெளியேறுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    உடல்நலக்குறைவு:

    உடல்நலக்குறைவு:


    கடந்த சீசனில் போட்டியாளராக வந்த நடிகர் ஸ்ரீ, இப்படித்தான் கலகலப்பில்லாமல் தனிமையில் இருந்தார். பின்னர் ஒரு சில நாட்களிலேயே உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி வீட்டில் இருந்து அவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+