பிக்பாஸ் 2 : அடித்தாலும், பிடித்தாலும் ஒண்ணா சேர்ந்து கொள்ளும் ஜோடி!
எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டிருப்பதால், பிக்பாஸ் வீட்டில் சாந்த சொரூபியாக வலம் வருகிறார் பாலாஜி.
சென்னை : பிக்பாஸ் வீட்டில் அதிகம் மோதிக் கொள்ளும் நித்யா - பாலாஜி ஜோடி கடந்த சில நாட்களாக அமைதியாக, ஒற்றுமையாக இருந்து வருவது பலரையும் ஆச்சர்யப் படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் பாலாஜி - நித்யா இருக்கிறார்களா? அல்லது பாலாஜி- நித்யா வீட்டில் பிக்பாஸ் நடக்கிறதா எனச் சந்தேகப் படும் அளவிற்கு கடந்தவாரம் முழுவதும் பிரச்சினைகளால் வீட்டை நிரப்பி இருந்தது அந்தத் தம்பதி.
வார இறுதி நாட்களில் தோன்றிய கமலும் கூட, குறும்படம் போட்டுக் காட்டி குட்டு வைக்கும் அளவிற்கு மனைவி நித்யாவைத் திட்டித் தீர்த்திருந்தார் பாலாஜி.

அது போன வாரம்:
ஆனால், இதெல்லாம் கடந்தவாரம் நடந்தது. தற்போது அங்கு நிலைமையே வேறு. இந்த வாரம் எலிமினேஷனுக்கு இருவருமே தேர்வாகியுள்ள நிலையில், இருவரும் சமாதானமாக நடந்து கொள்வது பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜூஸ், காப்பி:
அதிலும், நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் டேங்கில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் கையால் பிடித்துக் கொண்டு வெயிலில் அமர்ந்திருந்த நித்யாவைப் பார்த்து பாலாஜிக்கு பீலிங்ஸ் ஆப் இந்தியா. ஜூஸ் போட்டுக் கொடுப்பது, காப்பி ஆற்றிக் கொடுப்பது என மனைவிக்கு சேவை செய்த வண்ணம் இருந்தார்.

இது தான் காரணமா?
சக போட்டியாளர் என்ற முறையில் தான் தனது குழுவில் உள்ள நித்யாவை அவர் இப்படிக் கவனித்துக் கொள்கிறாரா என்றால் இல்லை. காரணம் மற்ற போட்டியாளர்கள் யாரையும் இப்படி அவர் விழுந்து விழுந்து கவனிக்கவில்லை.

பாலாஜி ஹேப்பி:
கடந்த வாரம் மனைவியை கழுவிக் கழுவி ஊற்றி, கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்த பாலாஜி, இந்த வாரம், ‘ரெண்டு நாளா நித்யா சிரிச்சுட்டே இருக்கா.. பார்க்க மனசுக்கு சந்தோஷமா இருக்கு.. பசிக்கவேயில்ல' எனக் கூறியது வேற லெவல். ஆனால், சாப்பாட்டு மேஜையில் சாப்பிட்டு முடித்தபிறகு அவர் இப்படிக் கூறியது தான் ஹைலைட்டே.

தாடிக்கு இவ்ளோ எபெக்டா?
கமல் திட்டியதால் பாலாஜி மனம் மாறினாரா இல்லை இந்த வாரம் எலிமினேசனில் தனது பெயர் இருப்பதால் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நடிக்கிறாரா எனத் தெரியவில்லை. அதோடு மாற்றம் தேவை என தாடியையும் எடுத்து விட்டார். அதனால் தான் அவர் தற்போது கோபப்படுவதில்லை என நெட்டிசன்கள் அவரைக் கலாய்த்து வருகின்றனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications