பிக்பாஸ் 2 : 4 நடிகைகள்... 3 காமெடியன்கள்... 2 வில்லன்... கசிந்தது போட்டியாளர்கள் விபரம்!

பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொள்ள இருப்பவர்களின் பட்டியலில் நடிகைகள் அதிகளவில் உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொள்ளப் போகும் நபர்கள் யார் யார் என்ற நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் கிடைத்துள்ளன.

விஜய் டிவியில் இன்று இரவு 7 மணி முதல் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. கடந்த சீசன் வெற்றியைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புடன் இன்று இந்த நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.

bigboss 2 tamil contestants list revealed

கடந்த சீசனைப் போலவே இம்முறையும் அதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆனபோதும், பலரது பெயர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நேற்றே நடந்து முடிந்து விட்டது. அதன்படி, அந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்ட சில பார்வையாளர்கள் அளித்த தகவலின்படி, இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதோ அதன் விபரமாவது:

1. தாடி பாலாஜி

2. தாடி பாலாஜியின் மனைவி நித்யா

3. நடிகை ஜனனி ஐயர்

4. நடிகை யாஷிகா ஆனந்த்

5. நடிகை மும்தாஜ்

6. கவின்

7, நடிகர் பொன்னம்பலம்

8. நடிகர் செண்ட்ராயன்

9. மமதா சாரி

10. டேனி

11. நடிகர் மகத்

12. அனந்த் வைத்தியநாதன்

13. நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன்

14. ஐஸ்வர்யா தத்தா


இவர்கள் தவிர இன்னும் இரண்டு பிரபலங்கள் நிகழ்ச்சியின் நடுவே சில நாட்கள் கழித்து பிக்பாஸ் குடும்பத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்தப் பட்டியலிலும் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவு நிகழ்ச்சி ஒளிபரப்பானதும் தான், பிக்பாஸ் சீசன் 2வின் அதிகாரப்பூர்வ போட்டியாளர்கள் யார் என்பது உறுதியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+