பிக்பாஸ் 2 : யாருக்கும் பிடிக்காத நித்யாவை நேரடியாக தலைவியாக்கிய பிக்பாஸ்!
பிக்பாஸ் வீட்டின் புதிய தலைவியாகியுள்ளார் நித்யா.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலானோருக்குப் பிடிக்காத நித்யாவை நேரடியாக அவ்வீட்டின் தலைவியாக தேர்ந்தெடுத்துள்ளதாக பிக்பாஸ் அறிவித்தது சக போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் யாருடனும் அவ்வளவாக ஒத்துப் போகாத போட்டியாளர் நித்யா தான். கணவரைப் பிரிந்தபிறகு, தான் மிகவும் கவனமாக நடந்து கொள்வதாக இதற்கு அவர் விளக்கம் கூறுகிறார். ஆனால், பெரும்பாலான விசயங்களில் அவர் மற்றவர்களின் கருத்துக்கு மதிப்புக் கொடுப்பதில்லை என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாக உள்ளது.
இந்நிலையில், ஜனனியின் தலைவிப் பதவி முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்த வாரம் வித்தியாசமாக அடுத்த தலைவியை தேர்ந்தெடுத்துள்ளார் பிக்பாஸ்.

நித்யா தான்:
அதாவது போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக தனித்தனியாக கன்பெக்சன் அறைக்கு அழைக்கப்பட்டனர். அங்கே அவர்களிடம், ‘இந்த வீட்டில் உங்களுக்குப் பிடிக்காத நபர் யார்?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பெரும்பாலானாவர்கள் நித்யா என்றே பதிலளித்தனர்.

பிக்பாஸ் அறிவிப்பு:
அதனைத் தொடர்ந்து பெரும்பாலானோருக்கு பிடிக்காத நித்யாவையே இந்த வாரத்தின் தலைவியாக நேரடியாக அறிவித்தார் பிக்பாஸ். இதனால், சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வெங்காயப் பிரச்சினை:
ஏற்கனவே, பிக்பாஸ் வீட்டில் நித்யாவால் வெங்காயப் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்தது. அதனைத் தொடர்ந்து ரசம் வைப்பதிலும் புதிய பிரச்சினை வெடித்தது. இதனால், நித்யா சக போட்டியாளர்களின் வெறுப்பிற்கு ஆளானார்.

வாக்குவாதம்:
கிச்சன் டீமில் ஒருவராக இருந்தபோதே, அவரது நடவடிக்கைகள் பலருக்கு கோபம் ஏற்படுத்தியது. இதனால் பலரும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில் வீட்டின் தலைவியாக நித்யா பதவியேற்றிருப்பதால் இனி என்னென்ன பிரச்சினைகள் உருவாகுமோ தெரியவில்லை.

எலிமினேசன் :
அதோடு, பிரச்சினைகளுக்கு நடுவே பாலாஜி, நித்யா பிரச்சினை தான் வீட்டின் முக்கிய பேசு பொருட்களில் ஒன்றாக உள்ளது. கமல் முன்னிலையிலேயே மாற்றி மாற்றி பேசியதால், சகபோட்டியாளர்கள் மட்டுமின்றி, மக்களிடமும் அதிருப்தியை அதிகம் சம்பாதித்துள்ள நித்யா, இந்த வாரம் எலிமினேசன் ஆகியிருக்கவும் வாய்ப்புகள் அதிகம்

காப்பாற்றிய பிக்பாஸ்:
ஆனால், அவரை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றினால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கெட்டு விடும் என பிக்பாஸ் மறைமுகமாக அவரைக் காப்பாற்ற இந்த தலைவி முடிவை எடுத்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் தலைவியாக இருப்பவரை சக போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்ய முடியாது என்பது நினைவுக் கூரத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications