பிக்பாஸ் 2: திரித்துச் சொன்ன ப்ரோமோ... அதிருப்தியில் மக்கள்!
பிக்பாஸ் ப்ரோமோ வீடியோக்களால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவைப் பார்த்துவிட்டு நிகழ்ச்சியில் பரபரப்பாக ஏதாவது இருக்கும் என எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம் தான் பதிலாகக் கிடைக்கிறது.
பிக்பாஸ் சீசன் 2 தொடங்கி நான்கு தினங்கள் ஆகியும், இன்னும் பரபரப்பாக அங்கு ஒன்றும் நடைபெறவில்லை. நடைபெற்ற இரண்டு சண்டைகளுமே சாப்பாட்டுக்காக இருந்ததால், அது ருசிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோவில், மும்தாஜ் கதறி அழுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
|
ப்ரோமோவால் பரபரப்பு:
அந்த ப்ரோமோவில் முதலில் மும்தாஜ், சென்ராயனுடன், ‘கட்டிப்பிடி கட்டிப்பிடிடா' பாடலுக்கு ஆடுவது போலவும், பின்னர் கதறி அழுவது போலவும், அங்கிருப்பவர்கள் சென்றாயனை விரட்டி அடிப்பது போன்றும் காட்சிகள் இருந்தது. இதனால் நேற்றைய எபிசோட் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

வையாபுரி ஞாபகம்:
ஆனால் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானதோ வேறு கதை. சென்றாயனுக்கும், டேனிக்கும் சக போட்டியாளர்கள் முடியை நேராக்கும் ஸ்ட்ரெயிட்டனிங் செய்து விடுகிறார்கள். பின்னர் மாடர்ன் உடையில் கலக்கலாக வெளியில் வருகிறார் சென்றாயன். இதைப் பார்த்தால், இதேபோன்று போன சீசனில் வையாபுரிக்கும் மாடர்ன் உடை அணிவித்து போட்டியாளர்கள் மகிழ்ந்தது நம் நினைவுக்கு வருகிறது.

குஷி:
பின்னர் மும்தாஜுடன் கட்டிப்பிடி கட்டிப்பிடி என்ற குஷி பாடலுக்கு நடனமாடினார் சென்றாயன். அதனைத் தொடர்ந்து, ‘நான் மும்தாஜுடன் டான்ஸ் ஆடிவிட்டேன்' என குழந்தைபோல குஷியாக அங்கிருந்து சென்று விட்டார் அவர்.

அதிர்ச்சி:
அதன் பிறகு, அங்கு நின்றிருந்த ஷாரிக்கைப் பார்த்து திடீரென கதறி அழ ஆரம்பித்துவிட்டார் மும்தாஜ். காரணம் அவர் மும்தாஜின் அண்ணன் மகனைப் போலவே இருக்கிறாராம். இதனால் அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிருப்தி:
பின்னர் ஒருவழியாக ஷாரிக்கே மும்தாஜை சமாதானம் செய்தார். ஆனாலும், மும்தாஜ் தொடர்ந்து அழவே, ஷாரிக்கை அங்கிருந்து வெளியே போகச் சொல்கின்றனர். இந்த ஆடியோவையும், சென்றாயனின் வீடியோவையும் இணைத்துத் தான் அந்த ப்ரோமோ உருவாக்கியுள்ளனர். இதனால் நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு உப்புச்சப்பில்லாமல் போய்விட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications