பிக்பாஸ் 2 : கமலுடன் மேடையில் தோன்றப் போகும் மகள் ஸ்ருதி.. இது தான் காரணம்!
வரும் வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிஹாசனும் பங்கேற்க இருப்பதாகத் தெரிகிறது.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரும் வாரம் நடிகர் கமலுடன் அவரது மகள் நடிகை ஸ்ருதிஹாசனும் பங்கேற்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2013-ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டங்களுக்கு பிறகு ரிலீசான படம் விஸ்வரூபம். கமல் நடித்து, தயாரித்து, இயக்கிய இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது விஸ்வரூபம் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.
'ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து கமல் தனது 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதில் உலக நாயகனுடன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வரவேற்பு:
இம்மாதம் 11ம் தேதி இப்ப்டத்தில் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இணையம் வாயிலாக கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதி இந்த டிரெய்லரை வெளியிட்டார். முதல் பாகத்தைப் போலவே இந்த டிரெய்லருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

பிக்பாஸ் மேடையில்:
இந்த சூழ்நிலையில், விஜய் டிவியில் தான் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் வரும் வாரம், அதாவது ஜூன் 29ம் தேதி விஸ்வரூபம் 2 படத்தில் சிங்கிள் டிராக்கை வெளியிட இருப்பதாக கமல் அறிவித்துள்ளார்.

நடனம்:
டிரெய்லரைப் போலவே இந்தப் பாடலையும் ஸ்ருதியே வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த முறை போல் இல்லாமல் பிக்பாஸ் மேடையில் தோன்றி இப்பாடலை அவர் வெளியிடுவார் என்றும், கலைநிகழ்ச்சியில் நடனமும் ஆட இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிலீஸ் தேதி:
இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்துள்ள மற்றவர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications