பிக் பாஸ் மேடையில் ‘மூக்கை’ உடைத்த ரம்யா... கமலுக்கு ஒரு ‘குறும்படம்’ ப்ளீஸ் !
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் பாடகி ரம்யா.
Recommended Video

சென்னை: அழகுக்காக மட்டுமே ஜனனிக்கு அந்த பார்பி பொம்மையை அளித்ததாகக் கூறி, மாற்றிப் பேசியதாக கமல் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தார் ரம்யா.
பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா நேற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அவரை, மேடையில் சந்தித்தார் கமல்.
அப்போது வழக்கம்போல ரம்யாவுக்கு ஜாலி டாஸ்க் ஒன்று அளிக்கப்பட்டது.

விளையாட்டுப் பொருட்கள்:
அதாவது, மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சில விளையாட்டுப் பொருட்களில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு பொருத்தமானவற்றை தேர்வு செய்து பொருத்த வேண்டும். அதன்படி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளாக வைத்தார் ரம்யா.

பொன்னம்பலத்திற்கு டாக்டர் செட்:
வைஷ்ணவிக்கு கூலிங் கிளாஸ், மஹத்துக்கு தூங்குமூச்சி எமோஜி பொம்மை, மும்தாஜுக்கு அழுமூச்சி பொம்மை, ரித்விகாவுக்கு கண்ணாடி, பொன்னம்பலத்திற்கு டாக்டர் செட் என ஒவ்வொன்றாக காரணம் சொல்லி வைத்தார் ரம்யா.

விளக்கம்:
அதில், அழகு மீது அதிக கவனம் கொண்டவர் என்ற பொம்மையை ஜனனிக்கு வைத்தார் ரம்யா. அவர் எப்போதும் அழகின் மீது கவனம் கொண்டவர் அல்ல, ஆனால் பார்ப்பதற்கு மேக்கப் இல்லாமலேயே அழகாக இருப்பார் என விளக்கம் அளித்தார்.

தப்பு.. தப்பு
பின்னர் இந்த விளையாட்டை அகம் டிவி வழியாக பிக் பாஸ் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்களுக்கு காண்பித்தார் கமல். அப்போது ஜனனியை அழகின் மீது கவனம் கொண்டவர் என்றார். ஆனால் தான் அப்படிக் கூறவில்லை என்றார் ரம்யா.

மக்கள் சாட்சி:
அதற்கு, ‘இப்போது அவர் மாற்றிப் பேசுகிறார்' என்றார் கமல். இதற்கு உடனடியாக பதிலளித்த ரம்யா, ‘நான் அப்படிக் கூறவில்லை. உண்மைதானே' என பார்வையாளர்களையும் சாட்சிக்கு அழைத்தார். அவர்களும் அதனை ஆம் எனக் கூற, கமலுக்கு எப்படியோ ஆகி விட்டது. ஆனால், அதனை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
இது பத்தி ஒரு குறும்படம் போடலாமா கமல் சார்..!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications