எங்க அம்மாவைப் பத்தி தப்பா பேசிட்டாரு பாலாஜி.. ஐஸ் அலறல்.. அசிங்கமா போச்சு பாஸு!
பாலாஜி மீது சர்வாதிகாரியான ஐஸ்வர்யா குப்பைகளைக் கொட்டி பழி தீர்த்துக் கொண்டார்.
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டின் சர்வாதிகாரி டாஸ்க்கில் முழு சந்திரமுகியாகவே மாறி செயல்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் தலைவியாக ஐஸ்வர்யா உள்ளார். ஏற்கனவே அவருக்கும், பாலாஜிக்கு இடையே திங்கட்கிழமை வாக்குவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று மும்தாஜிடம், 'தன் தாயைப் பற்றி தரக்குறைவாகத் திட்டி விட்டதாக' பாலாஜி குறித்து குறை கூறி அழுதார் ஐஸ்.
வீட்டின் தலைவியாக ஹிட்லர் போல் ஐஸ் நடந்து கொள்வதாக பாலாஜி கூறிய வார்த்தையைக் கேட்டதும், பிக் பாஸ் தலைக்குல் பல்பு எரிந்திருக்க வேண்டும் போல. இது நன்றாக இருக்கிறதே என தலைவியை சர்வாதிகாரியாக்கி பிரமோசன் கொடுத்தார்.

சர்வாதிகாரி டாஸ்க்:
சர்வாதிகாரி ஐஸ்சின் ஆலோசகராக சக போட்டியாளர்களால் விஷ பாட்டில் என செல்லமாக அழைக்கப்படும் ஜனனி, பாதுகாவலராக டேனி அமர்த்தப்பட்டனர். ஐஸ்ஸுவிற்கு கார்டன் பகுதியில் சிலை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.

பிக் பாஸின் திட்டம்:
ஏற்கனவே வீட்டின் பல போட்டியாளர்களின் சுயரூபங்கள் தெரிந்து வருவதால், கோபத்தில் இருந்த ஐஸ், தனக்கு கிடைத்த சர்வாதிகாரி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டார். அவரது எரிகிற புண்ணில் எண்ணெய் விடுவது போல், வீட்டிற்குள் பாலாஜி, ஷாரிக், ரித்விகா உள்ளிட்டோர் ஐஸ் பற்றி பேசும் வீடியோவை லைவ்வாக சர்வாதிகாரிக்குப் போட்டுக் காட்டி சூடேற்றினார் பிக் பாஸ்.

குப்பைகளைக் கொட்டினார்:
இதனால் ஆவேசமடைந்த ஐஸ், ஆலோசகரும், பாதுகாவலரும் எடுத்துச் சொல்லியும் கேட்காமல், பாலாஜி மீது வீட்டில் இருந்த குப்பைகளை கொட்டுமாறு ஷாரிக்கிற்கு உத்தரவிட்டார். ஆனால் அவர் செய்யாமல் போகவே, ஆவேசமாக தானே குப்பை தொட்டியை எடுத்து பாலாஜி மீது கொட்டினார்.

கலங்கிய பாலாஜி:
இதனால் வீட்டில் இருந்த சகபோட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதெல்லாம் ரொம்ப ஓவர் என அழுது கொண்டே மும்தாஜ், செண்ட்ராயன், ரித்விகா உள்ளிட்டோர் குப்பைகளை சுத்தம் செய்ய முற்பட்டனர். ஆனால், அவர்களை ஓரம் போகச் சொல்லி விட்டு அதே இடத்தில் அப்படியே கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தார் பாலாஜி.

எதிர்ப்பு:
தான் இந்த டாஸ்க் விளையாட விரும்பவில்லை என ஏற்கனவே பாலாஜி கூறியிருந்தார். ஆனபோதும், தனிப்பட்ட தனது கோபங்களால் அவரைப் பழிவாங்கும் வகையில் குப்பையைக் கொட்டியது டூ மச் என சமூகவலைதளத்தில் ஐஸ்வர்யாவிற்கு எதிரான கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications