பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக உலா வந்த ‘வைரமுத்து’ !
டேனியின் நடவடிக்கைகள் குறித்து பாலாஜி, மஹத் உள்ளிட்டோர் புறணி பேசினர்.
Recommended Video

சென்னை : பிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களை வைரமுத்து என அழைக்கின்றனர்.
கடந்த சீசனைக் காட்டிலும் இம்முறை பிக் பாஸ் வீட்டில் தமிழ் அல்லாது ஆங்கிலம் மற்றும் இந்தி உரையாடல்களை அதிகம் கேட்க முடிகிறது. பிக் பாஸும் இதனை அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை.
முதல் சீசனில் அதிகம் ஆங்கிலம் பேசிய போட்டியாளர்கள் கண்டிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தண்டனையும் அளிக்கப்பட்டது.

இந்தி:
ஆனால், இம்முறை அது போல் தண்டனை அளித்தால் போட்டியானவர்களில் பெரும்பாலானோருக்கு தண்டனை அளிக்க வேண்டும். ஏனெனில் யாஷிகா, ஐஸ்வர்யா போன்றோருக்கு தமிழை விட இந்தி மற்றும் ஆங்கிலம் தான் டக்கென்று பேச வருகிறது.

தொகுப்பாளர் ஸ்டைல்:
சீசன் 2 போட்டியாளர்களில் மமதி மட்டுமே ஆரம்பத்தில் இருந்து முடிந்தளவு தூய தமிழில் பேசி வந்தார். ஆனாலும் அவர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது போன்ற செயற்கையான ஏற்ற இறக்கங்களுடன் பேசியதால் அவரது பேச்சை ரசிக்க இயலவில்லை.

டேனி:
அவரை வீட்டில் உள்ளவர்கள் வைரமுத்து என செல்லப்பெயர் வைத்து அழைத்துள்ளனர். இதனை நேற்றைய நிகழ்ச்சியில் பாலாஜி தெரிவித்தார். அதோடு, தற்போது டேனியும் அதேபோன்று தூய தமிழில் பேசுவதாகவும், அவருக்கு வைரமுத்து என நினைப்பு என்றும் சுட்டிக் காட்டினார்.

பயமா?
இதனால் நேற்று பிக் பாஸ் வீட்டில் வைரமுத்து பெயர் அடிபட்டது. மற்ற போட்டியாளர்களின் செல்லப் பெயர்களை எல்லாம் ஒரு எபிசோட்டில் சொல்ல வைத்தார் பிக் பாஸ். ஆனால் அப்போதும் அவ்வீட்டில் ‘வைரமுத்து' என ஒருவருக்கு செல்லப்பெயர் வைத்திருப்பது பற்றி யாரும் மூச்சுக்கூடவிடவில்லை. வழக்குப் போட்டு விடுவார் என்ற அச்சமோ என்னவோ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications