எல்லாம் போஷிகா எபெக்ட்... ஆனா, பாவம் ரம்யா மாட்டிக்கிட்டாங்க!
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரம்யாவுக்கு அளிக்கப்பட்ட ஜாலி டாஸ்க்கை அகம் டிவி வழியாக மற்ற போட்டியாளர்களும் பார்த்தனர்.
சென்னை: கமல் முன்னிலையில் ரம்யாவுக்கு அளிக்கப்பட்ட ஜாலி டாஸ்க்கை அகம் டிவி வழியாக பார்த்த பிக் பாஸ் போட்டியாளர்கள் கலவையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர்.
பிக் பாஸ் வீட்டின் நான்காவது போட்டியாளராக நேற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் பாடகி ரம்யா. அப்போது கமல் முன்னிலையில் மேடையில் அவருக்கு ஜாலி டாஸ்க் ஒன்று அளிக்கப்பட்டது.
அதன்படி, மேடையில் இருந்த விளையாட்டுப் பொருட்களை, பிக் பாஸ் போட்டியாளர்களின் குணாதிசயங்களுக்குத் தகுந்தபடி தேர்வு செய்ய வேண்டும்.

டாஸ்க்:
ரம்யாவும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தைரியத்தில், மற்ற போட்டியாளர்களுக்கு எங்கே தெரியப் போகிறது என மனதில் பட்டதை அந்த டாஸ்க்கில் வெளிப்படுத்தினார். ரம்யா என்றில்லை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர்கள் அனைவருமே இதே மனநிலையில் தான் இந்த டாஸ்க்கை எதிர் கொள்வர்.

அதிர்ச்சி:
ஆனால், நேற்று அப்படி நடக்கவில்லை. ரம்யா ஒதுக்கிய பொம்மைகளை அகம் டிவி வழியாக வீட்டில் இருந்த போட்டியாளர்களிடம் காட்டிக் கொடுத்தார் கமல். இதனால் பல போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோப ரியாக்சன்:
ரம்யா வெளியேறியதால் வருத்தத்தில் இருந்த பல போட்டியாளர்கள், ‘அட என்னைப் பற்றி இப்படியா நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்?' என அவர் மீது கோபப் பட்டதைக் கூட அவர்களது முக ரியாக்ஷன்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

மிரட்டிய மஹத்:
மஹத் மற்றும் செண்ட்ராயன் இதனை வெளிப்படையாகவே தெரிவித்தனர். மஹத்திற்கு தூங்கு மூச்சி பொம்மை அளித்திருந்தார் ரம்யா. இதைப் பார்த்து, ‘வெளில வந்து உன்னைப் பார்த்துக்கறேன்' என ஜாலியாக ரம்யாவை மிரட்டினார் மஹத். இதேபோல், செண்டுவுக்கு முகமூடியைத் தேர்வு செய்திருந்தார் ரம்யா. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செண்டு, ‘ஏன் மேடம், எனக்குப் போயி.. எனக்குப் புரியலை' என தட்டுத் தடுமாறினார். மும்தாஜும் அழுமூச்சி பொம்மையால் முகத்தைச் சுருக்கினார்.

எனக்கு மட்டும் ஏன்?
இப்படி பிக் பாஸ் காட்டிக் கொடுப்பார் என எதிர்பார்க்காத ரம்யா, ‘மற்ற போட்டியாளர்களுக்கெல்லாம் வீட்டை விட்டு வெளியேறும் போது இப்படி செய்யலையே. எனக்கு மட்டும் ஏன் பிக் பாஸ்?' என ஒய் திஸ் கொலைவெறி ரேஞ்சுக்கு ரியாக்ட் பண்ணினார். இதெல்லாம் கடந்த வார எபெக்ட் தான். ஏற்கனவே விறுவிறுப்பில்லாமல் சென்று வருகிறது பிக் பாஸ் 2. எனவே, எதையாவது செய்து நிகழ்ச்சியை பரபரப்பாக்க நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் தலை கீழாக நின்று யோசித்து வருகின்றனர்.

மேடையில் போஷிகா:
அந்தவகையில் கடந்த வாரம் நித்யா எலிமினேட் ஆனபோது, அவரது மகள் போஷிகா மேடையில் தோன்றினார். இது அகம் டிவி வழியாக சக போட்டியாளர்களுகு குறிப்பாக நித்யாவின் கணவரும், போஷிகாவின் அப்பாவுமான பாலாஜிக்கு காண்பிக்கப்பட்டது. அப்போது பாலாஜியோடு சேர்ந்து சக போட்டியாளர்களும் உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் விட்டு அழுதனர்.

சைடு கேப்பில்..
ஆனால், தெய்வமகள் ரேஞ்சுக்கு அப்பா-மகள் பாசப்போராட்டத்தை ரசித்துக் கொண்டே, சைடு கேப்பில் மேடையில் நித்யா விளையாடிய ஜாலி டாஸ்க்கையும் கவனிக்கத் தவறவில்லை. பின்னர் இது குறித்து வீட்டில் அவர்கள் விவாதித்தனர். இதனைப் பார்த்த பிக் பாஸ், ‘இது நல்ல திட்டமாக இருக்கிறதே' எனத் தெரிந்து கொண்டார்.

முகமூடியும் தொடரும்:
எனவே, நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்ட நினைத்த பிக் பாஸ், இந்த வாரம் ரம்யா மேடையில் விளையாடியதை அகம் டிவி மூலம் சக போட்டியாளர்களிடம் போட்டுக் காட்டி விட்டார். இனி வரும் வாரங்களிலும் இது தொடரலாம் எனத் தெரிகிறது. எனவே, இனி கமல் முன்னிலையிலும் போட்டியாளர்கள் தங்கள் முகமூடியை கழட்ட மாட்டார்கள் என எதிர்பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications