நெய் நெய் என செண்டுவை ஒதுக்கிய மும்தாஜ்!
பிக் பாஸ் வீட்டின் சமையல் வேலையில் செண்ட்ராயனை ஈடுபடுத்தக்கூடாது என மும்தாஜ் கண்டிப்புடன் கூறி வருகிறார்.
சென்னை: சுத்தமாக வேலை செய்யமாட்டார் என்பதால், பிக் பாஸ் வீட்டின் சமையல் வேலையில் செண்ட்ராயனை ஈடுபடுத்தக் கூடாது என்பதில் நடிகை மும்தாஜ் தீவிரமாக உள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் வாரந்தோறும் போட்டியாளர்கள் தங்களுக்குள் குழு அமைத்து வேலைகளைப் பங்கிட்டு செயல்பட்டு வருகின்றனர். வீட்டின் தலைவர் தலைமையின் கீழ் இந்தக் குழுக்கள் தங்கள் வேலைகளைச் செய்வர்.
மற்றக் குழுக்களைவிட அதிக வேலைப்பளு மிக்கது சமையல் குழுவின் பணி. வீட்டில் உள்ள அனைவருக்கும் டீ, காபி போட்டுக் கொடுப்பதில் இருந்து டாஸ்க்குகளுக்கு இடையே சாப்பாட்டு வேலையையும் அவர்கள் செய்து முடிக்க வேண்டும். அதிலும் பிக் பாஸ் கொடுக்கும் குறைந்த அளவு உணவுப் பொருட்களைக் கொண்டு அனைவருக்கும் உணவைப் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

அதிக வேலைப்பளு:
இதுவரை நன்கு சமையல் தெரிந்தவர்களைக் கொண்டு இந்த சமையல் குழு அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மற்ற குழுக்களில் இருப்பவர்களுக்கு சமையல் செய்பவர்களின் பணிச்சுமை தெரிவதில்லை. இதற்கு கடந்த வாரம் வைஷ்ணவி, மஹத் மற்றும் செண்டு ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட சண்டையே இதற்கு உதாரணம்.

மும்தாஜின் எதிர்ப்பு:
இதனால் அடுத்தமுறை செண்டுவையும் சமையல் குழுவில் இணைக்க வேண்டும் என்பது பலரது எண்ணம். ஆனால், இதற்கு ஆரம்பம் முதலே மும்தாஜ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். செண்டுவிடம் அதிக சுத்தம் இல்லை என்பது தான் அவர் கூறும் காரணம்.

தொடர்ந்து அதே வேலை:
முதல் வாரத்திலேயே செண்டுவிற்கு ஜனனி பாத்ரூம் கழுவும் வேலை கொடுத்ததற்கு அதிக எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அடுத்தடுத்த வாரங்களிலும் அவர் அந்த வேலை தான் தொடர்ந்து செய்து வருகிறார். மற்ற வேலைகளில் அவரைப் பார்க்க இயலவில்லை.

முந்திரிக்கொட்டை மும்தாஜ்:
இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் தலைவர் என யாரும் இல்லாத நிலையில், போட்டியாளர்களே தங்களுக்குள் குழுக்களைப் பிரித்துக் கொண்டனர். அதன்படி மும்தாஜ் தானே சமையல் வேலை செய்வதாகக் கூறினார். செண்டுவோ தானும் சமையல் குழுவில் இணைய ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனாலும் நாசுக்காக அவரை மறுத்து விட்டார் மும்தாஜ்.

பாலாஜி கிண்டல்:
இது குறித்து பாலாஜியிடம் மும்தாஜ் கூறுகையில், ‘நஹி நஹி' எனத் தெரிவித்துள்ளார். இதனை மும்தாஜிற்கு தெரியாமல் பாலாஜி கிண்டலடித்தார். அப்போது, ‘நெய் நெய்' என மும்தாஜ் கூறியதாக அவர் கூறினார்.

ஒதுக்கும் போட்டியாளர்கள்:
ஏற்கனவே இது குறித்து முன்பு பேசுகையில், ‘செண்ட்ராயன் சுத்தமாக இருக்க மாட்டார். எனவே அவரை சமையல் வேலையில் ஈடுபடுத்தக்கூடாது' என வெளிப்படையாகவே மும்தாஜ் கூறியது நினைவுக் கூரத்தக்கது. அதேபோல், அவரது உருவத்தை வைத்து பலரும் அவரை ஒதுக்குவது வெளிப்படையாகவே தெரிவதாக மக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications