அந்த ‘அணில்’ இன்னும் எலிமினேட் ஆகல பாஸ்!
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களை விட அணில் ஒன்று பார்வையாளர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
சென்னை: பிக் பாஸ் வீட்டில் அதிகாரப்பூர்வமாக நுழைந்த போட்டியாளர்கள் எண்ணிக்கை 16. ஆனால், சத்தமில்லாமல் அங்கு வசிக்கும் சில போட்டியாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தான் அணில், சிட்டுக்குருவி போன்றவர்கள்.
பிக் பாஸ் சீசன் 2 தொடங்கியதும் அதிகாரப்பூர்வமாக 16 போட்டியாளர்களை கமல் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். தற்போது அவர்களில் 10 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். மீதமுள்ள ஆறு பேர் கடந்த சில வாரங்களில் வெளியேற்றப்பட்டனர்.
இது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். ஆனால், இந்தப் போட்டியாளர்கள் தவிர பிக் பாஸ் வீட்டில் அணில், சிட்டுக்குருவி என சிலரும் உள்ளனர்.

சுறுசுறுப்பாக அணில்:
போன சீசன் மாதிரி இந்த சீசன் விறுவிறுப்பாக இல்லை என்ற சலிப்பு மக்களைப் போலவே, கேமராமேன்களுக்கும் இருக்கிறது போல. அதனாலேயே தினமும் காலையில் வேக்கப் சாங் போடும் போது சுறுசுறுப்பாக அந்த அணிலைக் காண்பித்து தான் பெரும்பாலும் பிக் பாஸ் வீட்டின் காட்சிகளை ஆரம்பிப்பார்கள்.

எலிமினேட் ஆன அணில்:
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அந்த அணிலை காட்டவில்லை. அதற்குப் பதிலாக சிட்டுக்குருவி ஒன்றைக் காட்டி வந்தார்கள். இதனால் அது எலிமினேட் ஆகி விட்டதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர். அதோடு, வைல்ட் கார்டு எண்ட்ரியாக சிட்டுக்குருவி வந்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

மகிழ்ச்சி பாஸ்:
ஆனால், அவர்களின் யூகம் எல்லாம் பொய், தான் இன்னும் பிக் பாஸ் வீட்டில் தான் இருக்கிறேன் என நேற்று மீண்டும் அட்டெண்டன்ஸ் போட்டுள்ளது அணில். இதனால் அதன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போகிற போக்கைப் பார்த்தால் அந்த அணிலுக்கு ஒரு ஆர்மி ஆரம்பித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை

புலம்பல்:
இந்த அணில், சிட்டுக்குருவி தவிர பிக் பாஸ் வீட்டில் சில எலிகளும் இருக்கின்றன. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என கேமராக்களால் சூழப்பட்ட வீட்டில் அந்த எலிகளை இதுவரை யாரும் காட்சிகளில் காட்டியதில்லை. ஆனால், போட்டியாளர்கள் மட்டும் அவ்வப்போது இது குறித்து புலம்புவார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications