கமல் சொல்வதற்கு முன்னமே.. பிக் பாஸ் அறிவிப்பால் உடைபட்ட ‘சஸ்பென்ஸ்’
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யாஷிகா வெளியேறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
சென்னை: யாஷிகா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற மாட்டார் என்பது நேற்றைய பிக் பாஸ் அறிவிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.
வாரம் ஒரு போட்டியாளர் என பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி வருகின்றனர். அந்தவகையில் இந்த வாரம் எவிக்சனுக்கு மஹத், பொன்னம்பலம், மும்தாஜ், யாஷிகா மற்றும் வைஷ்ணவி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இம்முறை நாமினேட் செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள் ஐந்து பேருமே முக்கியமானவர்கள் என்பதால், யார் வெளியேறப் போவது என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது.
கமல்:
வழக்கமாக சனிக்கிழமை பிக் பாஸ் மேடையில் தோன்றும் கமல், எவிக்சனுக்கு நாமினேட் ஆனவர்களில் பாதுகாப்பாக இருக்கும் ஒருவரை பற்றி மட்டும் அறிவிப்பார். பின் அடுத்த நாள் மீதமுள்ள போட்டியாளர்களில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார்.
சிறந்த போட்டியாளர்:
இந்நிலையில், நேற்றுடன் முடிந்த எங்க ஏரியா உள்ள வராத டாஸ்கின் முடிவில் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்களாக யாஷிகாவும், செண்ட்ராயனும் தேர்வு செய்யப்பட்டார்கள். எனவே அவர்களை அடுத்த வாரம் எவிக்சனுக்கு நாமினேட் செய்ய முடியாது என பிக் பாஸ் அறிவித்தார்.
உடைபட்ட ரகசியம்:
ஏற்கனவே இந்த வாரம் எவிக்சன் லிஸ்டில் உள்ள யாஷிகாவை, அடுத்த வாரம் யாரும் நாமினேட் செய்ய முடியாது என பிக் பாஸ் கூறுகிறார் என்றால் என்ன அர்த்தம்? இந்த வாரம் அவர் சேஃப். அவர் வெளியேறவில்லை என்பது தானே அர்த்தம்.
நித்யா வெளியேறிய வாரம்:
ஏற்கனவே நித்யா வெளியேறிய வாரம், அவரை விட அதிக எதிர்ப்பு வாக்குகளை மக்களிடம் இருந்து பெற்றார் யாஷிகா. ஆனால், யாஷிகாவைக் காப்பாற்றி நித்யாவை வெளியேற்றினார் பிக் பாஸ். அந்தவகையில் இம்முறையும் எலிமினேசனில் இருந்து அவர் தப்பியுள்ளார்.
இவர்களில் ஒருவர்:
அதே சமயம், இந்த வாரம் டாஸ்க்கில் மோசமாக விளையாடிய போட்டியாளர்களாக மும்தாஜும், பொன்னம்பலமும் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த முறைகளில் இவ்வாறு தேர்வான சிலரை நேரடியாக அடுத்த வாரம் எவிக்சனுக்கு பரிந்துரை செய்தார் பிக் பாஸ். ஆனால் இம்முறை அப்படி செய்யாததன் மூலம் இவர்கள் இருவரில் ஒருவர் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications