பிக்பாஸ் சீசன் 3 கொண்டாட்டம்... இதுதான் உண்மை...!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் ஹைலைட் ஷோ என்று பேசப்படுவது உலக நாயகன் கமல் வருடா வருடம் ஒருமுறை நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த முறை கமல்ஹாசன் பங்கு அவ்வளவாக இல்லை என்றாலும், சீசன் 3 ஹவுஸ்மேட்ஸ் வித்தியாசமாகத்தான் இருந்தார்கள்.
பிக்பாஸ் வீட்டினுள் ஒட்டி உறவாடி இருந்த கவின், லாஸ்லியா இந்த பிக் பாஸ் கொண்டாட்டத்தில் ஏதாவது பேசி, இருவரின் காதலை நிரூபிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில், பிக்பாஸ் கொண்டாட்டம் என்று ஒரு நிகழ்ச்சியை பிக்பாஸ் சீசன் 3 முடிந்த கையோடு சூட்டோடு சூடாக சூட் செய்து, நேற்று ஞாயிறு மதியம் 3:30 மணி அளவில் ஒளிபரப்பினார்கள்.

ஹவுஸ் மேட்ஸ்
பிக்பாஸ் சீசன் 3 கொண்டாட்டத்தை நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கினார். ஹவுஸ்மேட்ஸ் ஆண்கள் ஒருபக்கம், பெண்கள் ஒரு பக்கம் என்று அமரவைத்து ஆரம்பத்திலேயே நிகழ்ச்சி வேறு, ரியாலிட்டி வேறு என்று உணர்த்தி இருந்தது நன்றாக இருந்தது.

கவின் லாஸ்லியா
ஒரு இடத்திலும் கவின் பற்றி லாஸ்லியாவோ, லாஸ்லியா பற்றி கவினோ பேசவில்லை. இருவரும் பங்கேற்கும் டான்ஸ் அல்லது உரையாடல் என்று எதுவும் இல்லை. லாஸ்லியா குடும்பம் பற்றி மட்டும் பேச வைத்து அழகு பார்த்தது நன்றாக இருந்தது.

ரொம்ப டீசன்ட்
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கொண்டாட்டம் யார் வாய்க்கும் அவல் போடாமல் ரொம்ப டீசன்டாக இருந்தது. இயக்குநர் சேரனை ட்ரீட் செய்த விதமும் நன்றாக இருந்தது. வழக்கம் போல தர்ஷன், கவின், சாண்டி, முகேன் கூட்டணி களை கட்டியது.

அம்மா வனிதா
வனிதாவின் இரண்டாவது பெண் குழந்தையும் வனிதா விஜயகுமார் மாதிரி ரொம்ப போல்டாக பேசியது ஸோ சுவீட். வனிதாவின் சமயோசித புத்தியாக பாட்ஷாவா இருந்த அம்மாவை அடிச்சவங்களை நீ அடிச்சுட்டு வான்னு வனிதா விஜயகுமார் சமயோசிதமாக சிந்தித்து மகளுக்கு வழிகாட்டியதை கோபிநாத் ரொம்பவே புகழ்ந்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications