Bigg boss 3 tamil: எனக்கு ஒடம்பு வச்சுட்டுதுன்னு சொல்றாங்க... லாஸ்லியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் ஹவுசில் என்னதான் வேறு நாடுகளில் இருந்து கலந்துக்க ஹவுஸ் மேட்ஸ் வந்திருக்கிரார்கள் என்று பெருமைப்பட்டு கொண்டாலும், கொஞ்சம் வெட்கி தலை குனியவும் வேண்டி இருக்கிறது.

இலங்கையிலிருந்து வந்திருக்கும் தமிழ்ப் பொண்ணு லாஸ்லியா, வந்த நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்துக்கலை. இலங்கை தமிழர்கள் என்றாலே தொப்புள்கொடி உறவு என்று நம்ம ஊர் மக்கள் தனி மதிப்பு தந்துகொண்டு இருக்கிறார்கள்.

அத்தனை மக்களின் பிரதிநிதியாக வந்திருக்கும் லாஸ்லியா வந்த வேலையை மறந்து பார்டரை தாண்டி நடந்துகொண்டு நிறைய எரிச்சல் அடைய வைக்கிறார். தர்ஷன், முகேன் விஷயமும் அப்படித்தான் நடந்துகொண்டு இருக்கிறது.

கதை மைனம்மா

கதை மைனம்மா

கமல்ஹாசன் ஒரு சனிக்கிழமை பேசும்போது ஃபாத்திமாவிடம் லாஸ் மைனம்மா கதையை சொல்ல, அதை மக்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்று,அந்த கதையை எங்களுக்கும் சொல்லுங்கள் என்று கமல் ஒரு வாய்ப்பு கொடுத்தார்.பெண்களின் மனம் எவ்வளவு மென்மையானது, மனிதர்கள் எத்தனை மனிதாபிமானத்தோடு இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் கதையாக மைனம்மா கதையை சொன்னார் லாஸ். அப்போது அவர் மீது மக்களுக்கு ஒரு பாசம் கன்னா பின்னாவென்று கண்மூடித்த தனமாக எகிறியது.

ஹோட்டல் பிக் பாஸ்

ஹோட்டல் பிக் பாஸ்

பிக் பாஸ் ஹோட்டலாக பிக்பாஸ் ஹவுஸ் மாறியது. அப்போது பிக் பாஸ் போட்ட ஆர்டர் படி நடந்துக் கொண்ட லாஸ்லியா, டாஸ்க் முடிந்தது என்று அறிவிப்பு வந்ததும், கையில் இருந்ததை தூக்கிப் போட்டுவிட்டு, யாருடா அது சீஃப் கெஸ்ட் என்று காலை தூக்கி காண்பித்தார். இது கொஞ்சம் இல்லை நிறையவே ஓவராகத்தான் இருந்தது.

சேரப்பா என்று

சேரப்பா என்று

ஆரம்பத்தில் சேரப்பா என்று அவரின் கையைப் பிடித்து வலம் வந்தவர், இப்போது அடியோடு அவரை கண்டுகொள்ளாமல் தர்ஷன், கவின், முகேன், சாண்டியுடன் என்று நேரத்தை செலவிடுவது மட்டும் இல்லாமல், அவர்களோடு சேர்ந்து கஸ்தூரி வனிதாவை கிண்டல் அடித்தும் வருகிறார். சேரப்பபாவை கிண்டல் அடித்தாலும், பதில் பேசாமல் சிரித்துக்கொண்டு இருக்கார்.

ஒடம்பு எனக்கு

ஒடம்பு எனக்கு

எனக்கு ஒடம்பு வச்சுட்டுதாம்ல சொல்றாங்கன்னு பசங்களிடம் போயி கேட்கிறார். யார் சொன்னதுன்னு அவங்க கேட்க, அவங்களுக்கு என்னடா பேர் வச்சு இருக்கோம்னு மறுபடி சிரித்துக் கொண்டே கேட்கிறார் லாஸ். அதுக்கு வத்திக் குச்சி வனிதன்னு பசங்க சொல்ல, ஓம்.. வத்திக் குச்சி வனிதா சொன்னாங்கன்னு இவரும் சொல்றார்.

என்ன சொல்ல வரோம்னா நிகழ்சசியை பாருங்க, ரசிங்க.. பிடிச்சு இருந்தா மீண்டும் மீண்டும் கூட பாருங்க. அவங்க ஆர்மி, இவங்க ஆர்மின்னு வச்சு டேக் பண்ணிக்கிட்டு நேரத்தை வீணாக்காதீங்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+