Bigg Boss 3 Tamil: முதல் நாள் சண்டை..மறுநாள் அதே பிரச்சனையில் டிபேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் ஹிட் ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சி. பலரையும் பல விதமாக பேச வைத்து வருகிறது. சில பேர் எப்போதும் பிக் பாஸ் பற்றியே விவாதித்து நேரத்தை வீணடிப்பதோடு, டென்ஷன் கூட ஆகிவிடுகிறார்கள்.

அத்தனை விஷயங்கள் பிக் பாஸ் ஹவுசில் இப்போது மக்கள் கூட விவாதிக்கும்படி பரபரப்பாக நடந்து வருகிறது. முகேன் அபிராமியிடம் எகிறிக் கொண்டு போவதும்., தர்ஷன் கிண்டலாக நக்கலாக கோபப்படுவதும் என்று எதிர்பாராத விஷயங்கள் நடைப்பெற்று வருகின்றன.

கடந்த இரண்டு சீசன்களை விட பல அவலங்கள் அரங்கேறி பிக் பாஸ் நிகழ்ச்சி, பலரின் மண்டைக்குள் உட்கார்ந்து பிராண்டி வருகிறது. நல்லவேளை வருஷத்துக்கு ஒருமுறை என்று இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்களே என்று சந்தோஷகொள்ள வைக்கிறது.

கோபம் மதுமிதா

கோபம் மதுமிதா

நேற்று முன்தினம் மதுமிதா பெண்களை ஆண்களை அடிமைப்படுத்தி வைத்து இருக்கிறார்கள் என்றும், யூஸ் செய்துக்கறாங்க என்றும் பயங்கர குற்றச்சாட்டுக்களை அடுக்கி இருந்தார். அதனால்தானோ என்னவோ, நேற்று, பல விஷயங்களை குறிப்பிட்டு சிறந்தவர்கள் ஆண்களா பெண்களா என்று டிபேட் வைத்து விட்டார்கள்.

சமையலில் கைதேர்ந்தவர்கள்

சமையலில் கைதேர்ந்தவர்கள்

சமையலில் கை தேர்ந்தவர்கள் ஆண்களா பெண்களா எனும்போது, பிக் பாஸ் ஹோட்டலாக மாறியபோது, மதுவைத்தான் செஃப் என்று பிக் பாஸ் அப்பாயிண்ட் செய்தார் என்று பதில் வந்தது பெண்கள் சைடில் இருந்து. ஆனால், சாண்டி பேசும்போது அதே பிக் பாஸ் கஸ்தூரியை செஃப் ஆ போடலைன்னு கிண்டல் செய்தார். முதல் நாளே சர்க்கரை பொங்கல் செய்து சொதப்பிய கஸ்தூரிக்கு உண்மையா எதுவும் சமைக்க தெரியாதா?

வேஸ்ட் ஹவுஸ்மேட்

வேஸ்ட் ஹவுஸ்மேட்

சாண்டி, கவின், முகேன், தர்ஷன் இவர்களுடன் சேர்ந்து கொண்டு லாஸும் ஏகத்துக்கும் கஸ்தூரியை கிண்டல் செய்வதில் கலந்துக்கறது நல்லாயில்லை. உண்மையில் கஸ்தூரி இத்தனை வேஸ்ட் ஹவுஸ் மேடாக இருப்பார் என்று யாரும் சற்றும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். எதுக்கு வருவானேன்.. இப்படி பரிதாபமாக அவஸ்தைப் படுவானேன் என்று பரிதாபம்தான் இருக்கிறது.

சாண்டி கம்பெனி

சாண்டி கம்பெனி

சாண்டி எப்போதும் பாடல், தாளம் என்று கலகலப்பாக இருக்கிறார் என்றாலும் அதிக கோபத்தை காண்பிக்காமல் இருக்கிறார். இந்த நான்கு நண்பர்களுக்குள் கோபம் வராதவர் சாண்டிதான். தர்ஷனின் கோபம் எரிச்சலைத் தருகிறது.

இன்னிக்கு ஒரு நாள் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடட்டும், நாளைக்கு கமல் சார் முன்னிலையில் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் என்று ஆவலுடன் காத்திருக்கும் மக்களோடும் நாமும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+