Bigg Boss 3 Tamil: எனக்கு போரடிக்குது பிக் பாஸ்... உங்களுக்கு எப்படி இருக்கு பாஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை; விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி உலகத் தமிழர்கள் ரசித்து பார்க்கும் ஒரு பிரபல நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டே நம்மவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவதுதான்.

சனி ஞாயிறு ரெண்டு நாளும் விஜய் டிவி பிக் பாஸ் நேரத்தில் சும்மா களைக்கட்டும். எங்கிருந்தாலும். தலைவர் வர்றாரு டா பார்க்கணும்னு பசங்க பைக்கை அவசரமா ஸ்டார்ட் செய்வதை பார்த்து இருக்கிறோம்.

திங்கள் யாரைப் பார்த்தாலும் பிக் பாஸில் கமல் இப்பட்டி பேசினார், அப்படி பேசினார்னுதான் திரும்பிய பக்கம் எல்லாம் பேச்சுக்கள் இருக்கும். சமூக வலை தளங்களிலும் தூள் பறக்கும்.ஆனால், இப்போது இந்த மூன்றாவது சீசனில் இது மிஸ்ஸிங்.

லேசான டாஸ்க்

லேசான டாஸ்க்

ரொம்ப எளிதான டாஸ்க்குகள்... சின்ன பசங்க ஓடியாடி விளையாடற மாதிரி டாஸ்க். ஒருத்தர் இனொருத்தரா மாறி நடிக்கும் டாஸ்க்குன்னு இந்த டாஸ்க் எல்லாம் பொசுக்குன்னு இருக்குது. அதுவும் பாயிட்ஸை குறைக்க ஓடிப்புடிச்சு ஒரு டாஸ்க், தண்ணிக்குள் கையை விட்டு அட்டையை எடுத்து அதன் மூலம் பாயிட்ஸை ஏத்திக்கறது ,குறைச்சுக்கறதுன்னு ஒரு டாஸ்க். இந்த குருட்டாம் போக்கு அதிர்ஷ்டத்துல நம்பர் ஒன் இடம் பிடித்த ஷாக்ஷியை அடுத்த வாரம் நாமினேட் பண்ண கூடாதாம்.

கம்மி சுவாரஸ்யம்

கம்மி சுவாரஸ்யம்

சுத்தி சுத்தி கவின், சாக்ஷி, லாஸ்லியா பிரச்சனைன்னு போரடிக்குது. ரொம்ப ஆட்டிடியூட் காமிச்சு பேசின லாஸ்லியா பத்தி இப்படி பேசக் கூடாதுன்னு கண்டிக்க யாருமில்லை. ஹவுஸ் மேட்ஸுக்கு நல்ல சம்பளம் கொடுத்தும், டாஸ்க் இவ்வளவு எளிதாக கொடுத்தால் எப்படி.முதல் இரண்டு சீசன்களில் எத்தனை கஷ்டமான டாஸ்க்குகள் என்று ஹவுஸ் மேட்ஸ் கஷ்டப்பட்டார்கள்.

பெரிய புரூஸ்லியா?

பெரிய புரூஸ்லியா?

மூன்றாவது சீசனில் காதல் கத்திரிக் காய், பொஸசிவ் என்றே பார்த்து பார்த்து போரடிக்குது. நிச்சயமா நல்ல கன்டென்ட் இல்லை. முகேன் என்ன பெரிய புரூஸ்லியா? கோவம் வந்தா அப்படியா வரணும். இவரை பிக் பாஸ் கூப்பிட்டு இதுவரை கண்டிக்காதது ஏன்? கோவத்தில் கட்டிலையே உடைச்சுட்டார்.அதுவும் பெண் விஷயத்தில்தான். இது பார்க்கறவங்களுக்கு என்ன பாடத்தை கற்பிக்குது.

என்னாச்சு நம்மவருக்கு

என்னாச்சு நம்மவருக்கு

நம்மவர் கமல்ஹாசனுக்கு என்னாச்சுன்னே தெரியலை..நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது தாமரை இலை தண்ணீர் போல பட்டும் படாமல் பேசறார். ஏதோ பேசுறார்...நாமும் பார்க்கிறோம் என்பது போலத்தான் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது இருக்கிறது. நம்மவருக்கு தேவையான கன்டென்ட் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இல்லையோ...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+