Bigg Boss 3 Tamil: இவ்வளவு அழகா புத்திமதி சொல்ல முடியுமா? ஆஹா சேரன்!
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆட்கள் குறைய குறைய சுவாரஸ்யமும் குறைந்துகொண்டே வருகிறது. அதோடு டாஸ்க் ரொம்ப போரடிக்குது.
ஹவுஸ் மேட்ஸ் நேற்று கண்ணாமூச்சு விளையாடியது உண்மையில் ஓவர். பிக் பாஸ் அவங்களை இப்படி சும்மா உட்கார வச்சு போரடிக்க வச்சு இருப்பாங்க போலும்.
இவங்க கண்ணா மூச்சு விளையாட, இவங்களுக்கு பின்னால ஒரு டீமே ராத்திரி பகலா தூங்காம வேலை பார்க்கறாங்க. அதுவும் அறுபது நாட்களைத் தொடும் நிலையில் ஹவுஸ் மேட்ஸை கண்ணாமூச்சு விளையாட வச்சு அழகு பார்க்கறாங்க.

தர்ஷன் ஷெரீன்
ஷெரீன், தர்ஷன் உறவு பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் என்று ஒரு தனி பாதையில் அதிக எமோஷன்ஸ் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் ஷெரீன் ரொம்ப டீசண்டா, அதே சமயம் மெச்சூரிட்டியா பிஹேவ் பண்றதுதான்.இவரும் ஒரு நாள் எமோஷன்ஸ் காட்டி கண்ணீர் துளிகள் விட்டாலும், இவருக்குள் இருக்கும் மன உறுதி பிரமிக்க வைக்கிறது. இதில் தர்ஷன் பங்கு என்று ஒன்றும் இல்லை.

எமோஷன் பெண்கள்
வெளியில் இருக்கும் போது பெண்கள் மன உறுதியுடன் இருக்கிறார்கள்.ஆண்கள் புரபோஸ் செய்தல்கூட உடனடி பதில் சொல்வதில்லை. ஆனால், பிக் பாஸ் போன்ற ஒரு வீட்டினுள் அவர்கள் அடைப்பட்டு கிடக்கும்போது அதிக எமோஷனல் ஆகி, தாங்களே ஒரு ஆணின் பின்னால் போகும் அளவுக்கு வீக் ஆகி விடுகிறார்கள்.

படு ஸ்ட்ராங்
ஆண்கள் தனித்து விடப்படும் போதும் நட்பு ரீதியில் அவர்களுக்கு ஆண்களுக்கு ஆண் அல்லது ஆண்களுக்கு பெண் என்று நட்பு ரீதியில் மட்டுமே பார்த்து எஸ்கேப் அல்லது மனதளவில் ஸ்ட்ராங் ஆகி விடுகிறார்கள். இது எப்படிப்பட்ட மேஜிக் என்று புரியவில்லை. பிக் பாஸ் வீட்டில் பெண்களை ஆண் துரத்தியதாக இதுவரை இல்லை. காதலுக்காக கண்ணீர் விடுவது பெண்கள். காதலில்லை என்று கண்ணீர் விடுவது ஆண்கள் என்றுதான் பிக் பாஸ் ஹவுசில் நடந்து வருகிறது.

அட்வைஸ் சேரன்
சேரன் லாஸ்லியா, கவின் இரண்டு பேரையும் அழைத்து மிக அருமையாக புத்திமதி சொன்னார். வேறு நாட்டிலில் இருக்கிறாள், அவளுக்கு ஏதாவது ஒன்று என்றால்கூட நம்மால் அங்கு போயி நிற்க முடியாது. முன்பை விட அவள் உன்னிடம் நெருக்கமாக இருக்கிறாள். இங்கு இருக்கும்போது ஒண்ணும் தெரியாதது.வெளியில் போன உடன்தான் எல்லாம் தெரியும், புரியும்.. அளவோட பழகுங்க என்று.
இதே கவின்தான் உள்ளூர் பெண்ணான சாக்ஷியையே ஆசை காண்பித்து நிராகரித்தது. எதற்கும் காலம் பதில் சொல்லும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications