Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bigg Boss 3 Tamil: அபிராமி அருமையான அட்வைஸ் லாஸுக்கு புரிந்து இருக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் போரடிக்க ஆரம்பிச்சாலும் டீம் உஷாராகி எதையாவது செய்து, நிகழ்ச்சியை பார்க்க வைத்துவிடுகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் ஆட்கள் குறைய குறைய, அழுகை, சண்டை என்று இருந்தது. சிரிப்பு என்பது மருந்துக்கும் இல்லாமல் இருக்க, மீண்டும் மோகன் வைத்யா, அபிராமி, சாக்ஷி மூவரும் என்ட்ரி கொடுத்துள்ளார்கள்.

மீண்டும் கலகலப்பாக மாறுது வீடு என்று ஆவலுடன் மக்கள் நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள். ஆனால், என்ன நடக்குமோ என்பதை பார்த்து தெரிஞ்சுக்கத்தான் வேணும்.

லாஸ்லியா அபிராமி

லாஸ்லியா அபிராமி

அபிராமி லாஸ்லியாவிடம் தனியாக பேசும்போது, நீ நான் முதலில் பார்த்த லாஸ்லியா இல்லை. ரொம்ப ஜாலியா இருப்பே..இப்போ என்னாச்சுன்னு கேட்க... சும்மா சிரித்தபடி இருந்த லாஸ்...தனக்கும் கவினுக்குமான எமோஷனல் ஏற்றத் தாழ்வில் போயிகிட்டு இருப்பதாக கூறுகிறார். உன்னோட பர்சனல் விஷயத்துல நான் தலையிடலை.ஆனால், எமோஷனல் காமிக்கறே.

சாக்ஷியும் நானும்

சாக்ஷியும் நானும்

லாஸ் நானே உனக்கு ஒரு உதாரணம்.எவ்ளோ எமோஷனல் காமிச்சு, எனக்கு கிடைச்ச இந்த அறிய வாய்ப்பை தவற விட்டுட்டேன்னு இப்போ ரொம்ப ஃபீல் பண்றேன். அது மாதிரி இந்த பிளாட் ஃபார்ம் உனக்கு கிடைச்சு இருக்கு. நீ எமோஷனல் காமிச்சு அங்க நிக்கறப்போ, நானும் சாக்ஷியும் அங்கே நிக்கற மாதிரி உணர்வு வருதுன்னு சொல்றாங்க. கேம்ல ஃபோகஸ் பண்ணுன்னு அட்வைஸ் பண்றாங்க.

லாஸ்லியா வனிதா

லாஸ்லியா வனிதா

வனிதா லாஸ்லியாவிடம் மட்டும் ஒரு சின்ன பெண்ணிடம் பெரியவளான தான் எப்படி நடந்துக்க வேண்டுமோ அதன் படி நடந்துக்கறாங்க. தலையணை தைச்ச விஷயத்தில் குவாலிட்டி செக்கிங் செய்யும் போது, லாஸ்லியா நிறைய ரிஜெக்ட் செய்ய, பாவம் போனா போகட்டும்னு நான் அஞ்சு செலக்ட் பண்ணினேன்னு வனிதா சொல்கிறார். வேணாம் வனிதாக்கா..நீங்க யாருக்கும் பாவம் பார்க்க வேணாம்னு லாஸ் எதிர்த்து பேசும்போது, கவினுக்கு லாஸ் சப்போர்ட் பண்ணும்போது எல்லாம் வனிதா சின்ன குழந்தையிடம் பிஹேவ் பண்ற மாதிரி சிரிச்சுகிட்டே கடந்து போனது வனிதா மெச்சூரிட்டி லெவலை காண்பிக்குது.

அபிராமி கிரஷ்

அபிராமி கிரஷ்

முதலில் கவின் மீது கிரஷ்னு சாக்ஷிகிட்டே சொல்லி ஆரம்பிச்சு வச்சது அபிராமிதான். பிறகு ஷாக்ஷி மாட்டினார். அடுத்து இப்போது லாஸ்லியா இந்த உறவுக்குள் சிக்கித் தவிக்கிறார். சேரனுடன் லாஸ்லியா பேசாமல் இருக்கும் வரை கவின் நல்ல மூடில் இருப்பார். பேசிட்டாங்கன்னா அப்செட் ஆயிருவார்.பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+