Bigg Boss 3 Tamil: வீக் எண்ட்.. கமல்ஹாசன் வந்தும் பிக் பாஸ்... ரொம்ப வீக்கா இருக்கே!
சென்னை: விஜய் டிவியின் பாப்புலர் நிகழ்ச்சி பிக் பாஸ்.வாரம் முழுவதும் ஹவுஸ் மேட்ஸ் காதல், கேலி, சண்டை, கலாட்டா என்று கூத்தடிக்க... வாரக் கடைசியில் நம்மவர் வந்து பஞ்சாயத்து செய்வார்.
பிக் பாஸ் சீசன் 3 இல் நம்மவர் அவ்வளவாக ஈடுபாடு காண்பிக்கவில்லையோ என்கிற அளவுக்கு அவர் வருகிற அந்த இரண்டு நாட்களும் நிகழ்ச்சி ரொம்ப டல்லடிக்குது.
இதுதான் நமக்கான இடம். இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசினாலும், அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவது போல ஆகிவிடும் என்று கமல் எண்ணுகிறாரோ எனும் அளவுக்கு நிகழ்ச்சியின் போக்கு இருக்கிறது.

அளவான கண்டிப்பு
கடந்த இரண்டு சீசன்களில் கமல் செய்த குறும்பு, அவரின் கண்டிப்பான பேச்சுக்கள், ஹவுஸ் மேட்ஸ் செயல்களுடனான தன்னுடையய அனுபவங்கள், சூசகமான அரசியல் கருத்துக்கள் எல்லாமே மிஸ்சிங். ஒருவேளை அரசியலில் முழுதாக இறங்கி விட்டதால்,இதுதான் நிகழ்ச்சித் தொகுப்பில் தனக்கான எல்லை என்று வழிவகுத்து கொண்டாரோ தெரியவில்லை.

தலைவன் இருக்கின்றான்
கமல் இப்போது மீசை இல்லாத கெட்டப்பில் இருக்கிறார்..பிக் பாஸ் 2 வில் கடந்த வருடம் இயக்குநர் ஷங்கரே வந்து அறிவித்த இந்தியன் பார்ட் 2 படம், அதோடு தலைவன் இருக்கிறான் ஆகிய இரு படங்களும் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது போலும் .இதை அவரே அறிவித்தும் உள்ளார் பிக் பாஸ் மேடையில். கமலின் புது படம் எதுவும் வெளியாகாத நிலையில், வாரா வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நம்மவரைப் பார்ப்பது ஒரு படம் பார்ப்பது போன்ற உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், பிக் பாஸ் சீசன் 3 அது போன்ற உற்சாகத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.

புதுவித உடைகள்
கடந்த இரண்டு சீசன்களில் கமல்ஹாசன் அணிந்து வந்தது போன்ற அழகுத தோற்ற உடைகளும் இந்த சீசனில் இல்லை. கமல்ஹாசன் என்றாலே ஒரு தனி வித அழகு.அவருக்கு உடைகள் டிசைன் செய்வது என்றால் ஆடை அலங்கார நிபுணர்கள் குஷியாகி விடுவார்கள்.இந்த சீசனில் கமல் உடையில் கவனம் செலுத்தாதது ஏன் என்று புரியவில்லை.என்னதான் அரசியலில் இருந்தாலும், அரசியல் வேறு இது வேறு அல்லவா. இப்படி பிரித்துப் பார்த்து தன்னை அர்ப்பணித்து ஒரு வேலையில் ஈடுபடுபவர்தானே கமல்?

நடிப்பு தொடரட்டும்
போனது போகட்டும் என்று இனியாவது கமல் நடிப்பைத் தொடர்ந்தால்தான் கமல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி திரும்பக் கிடைக்கும். அரசியல் ஒரு பக்கம் என்றாலும், நடிப்பில் அவர் இன்னும் இன்னும் என்று நல்ல படங்களை கொடுத்து, ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும். நல்ல குரல் வளம் கொண்ட பாடகர் கமல்ஹாசன் மீண்டும் பல பாடல்களை பாட வேண்டும் என்பதுதான் ரசிகர்கள் ஆசை. கமல் சார் பிக் பாஸ் போர் சார்!












Click it and Unblock the Notifications