Bigg Boss 3 Tamil: வனிதாவை சண்டைக்காரியாகவே களம் காண வைக்கும் பிக் பாஸ்!
சென்னை: விஐய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று 100 வது நாளை எட்டி உள்ளது. கடந்த ஒரு வாரமாகவே ஹவுஸ் மேட்ஸ் சமைக்காமல் ஏதோ டாஸ்க் என்று செய்து, பிக் பாஸ் அனுப்பி வைக்கும் உணவுகளை ஜாலியாக சாப்பிட்டு வருகின்றனர்.
வெளியேற்றப்பட்ட இந்த சீஸனின் ஹவுஸ் மேட்ஸ் ஃ பாத்திமா பாபு , மீரா, ரேஷ்மா, மோகன் வைத்யா உள்ளிட்டவர்கள் நேற்று முன்தினம் பிக்பாஸ் ஹவுஸுக்கு வந்திருந்தனர்.
பாட்டு, டின்னர்,குதூகலம் என்று இரண்டு நாட்கள் நல்ல படியாக சென்று கொண்டு இருந்த நிலையில், இன்று பிக் பாஸ் வனிதாவை அனுப்பி ஷெரீனுக்கு ஆப்பு வைக்க உள்ளார்.

வனிதா சண்டைக்காரி
வனிதா விஜயகுமாரை சண்டைக்காரி கோணத்திலேயே மீண்டும் மீண்டும் பிக் பாஸ் ஹவுஸுக்கு அனுப்பி வைத்து, வேடிக்கை பார்க்கிறது பிக்பாஸ். வலையில் சிக்கிக்கொண்ட மீன் போல வனிதாவும் சொன்னதை செய்கிறார். என்ன கான்டிராக்ட்டோ, அக்ரிமென்ட்டோ.. பாவம்..நல்ல அம்மாவை இப்படி செய்ய வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள்.

வாக்குகள் ஷெரீனுக்கு
பிக் பாஸ் ஹவுஸ் மேட் ஷெரீனுக்கு வாக்குகள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில், அவரை ஜெயிக்க விடாமல் செய்வது எனும் வேலையில் இறங்கி உள்ளது பிக் பாஸ்.நேற்று வரை கோலாகலம், கொண்டாட்டம் என்று இருத்த பிக்பாஸ் ஹவுஸுக்குள் இன்று வனிதா விஜயகுமாரை அனுப்பி வைத்து இருக்கும் பிக் பாஸ் புதிய ப்ரோமோ ஒன்றும் வெளியிட்டு இருக்கிறது.

உன்னால்தான் தர்ஷன்
தர்ஷன் உன்னால்தான் வெளியில் போனான் என்பது போல வனிதாவை பேசவிட்டு, ஷெரீனை அழ வைத்து, அவரின் வாக்குகளை குறைக்க திட்டம் போட்டு இருக்கிறார் பிக் பாஸ். யார் ஜெயிக்க வேண்டும் என்பதை சேனலுடன் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்துவிடுவது, பின்னர் வாக்குகள் என்று காண்பித்து தாங்கள் நினைத்தவர்களை டைட்டில் வின்னராக்குவது என்பதுதான். இதுவரையான இரண்டு சீசன்களில் இதுதான் நடந்தது என்பது ஏற்கனவே அரசல் புரசலாக மக்களிடையே பேசப்பட்டு வரும் நிலையில், இப்போது ஷெரீனை காலி பண்ண வைக்க முடிவு செய்து இருக்கிறார் பிக் பாஸ்.

கிளி வனிதா
வனிதா பிக் பாஸ் சொன்னதை செய்யும் கிளி மாதிரி நடந்துகொண்டு வருகிறார். இந்த நிலையில்,, இப்போது சாக்ஷி,வனிதாவை வீட்டுக்குள் அனுப்பி இருக்கிறார் பிக் பாஸ், பிக் பாஸ் வீட்டில் மீண்டும் கலகத்தை .ஏற்படுத்தும் வனிதா விஜயகுமார் அடிப்படையில் நல்ல பெண், போராட்ட குணமுடைய ஒரு பெண். ஆனால், அவர் ஒரு தாயாக இருந்து, தன்னைத் தேடி தனது மகன் வரவேண்டும் என்று பிக்பாஸ் ஹவுஸுக்குள் ஏக்கத்துடன் நுழைந்தவர்.
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்று, தனது நிகழ்ச்சி ரேட்டிங்கை மனதில் வைத்து வனிதாவை ஆட்டுவிக்கிறது. வனிதாவும், பிக்பாஸ் சொன்னதை செய்யும் கிளிப் பிள்ளையாக மாறி விட்டார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications