Bigg Boss 3 Tamil: நீங்களே சென்சார்... நீங்களே நீதிபதி.. அப்போ நாங்க யாரு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிட் ஷோ.. ஹிட் ஷோன்னு நாம்தான் சொல்லிக் கொண்டு இருக்கோம். நிறைய பொது மக்கள் நிகழ்ச்சி போர்னு நினைக்கும் அளவுக்கு பிக் பாஸ் மாறிப்போனது சோகமே.

முன்பு இருந்த இரண்டு சீசன்களில் கண்ட உலக நாயகன் கமல்ஹாசனை இந்த சீசனில் காணவில்லை. இது பெரும் பெரும் சோகம். அவருக்காக சனி, ஞாயிறுகளில் ஷோ பார்த்தவர்கள் கூட பார்ப்பதை நிறுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

கமலின் கையை சாரி வாயை கட்டிப் போட்டது யாரு? மக்களுக்கு தெரியாமல் சில விஷயங்களை மறைத்து பிக்பாஸ் ஷோ நடத்துவதன் நோக்கம்தான் என்ன? உங்களுக்கு நீங்களே சென்சாரா?

சரவணன் மது

சரவணன் மது

சரவணன் எதுக்கு வெளியே போனார்னா சப்பை மேட்டரை காமிக்கறீங்க. சின்ன வயசுல செய்த தவறுக்கு அவர் மன்னிப்பு கேட்டும், காலம் கடந்து தண்டனை கொடுக்க நீங்கள் என்ன நீதிபதியா? இதுக் குறித்து யாரேனும், ஏதேனும் வழக்கு போட்டார்களா? மதுமிதா தற்கொலைக்கு முயற்சிக்க காரணம் என்ன? தெரிந்தால்தானே அது முன் உதாரணமா இலையா என்று நாங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும்.

நீதிபதி சென்சார்

நீதிபதி சென்சார்

மது எதுக்கு தற்கொலைக்கு முயற்சித்தார்? நியாயத்தை எங்களுக்கும் சொல்லுங்க. உங்களுக்கு நீங்களே நீதிபதி சென்சார் என்றால், அப்போது மக்களாகிய நாங்கள் யார்? எங்களை எந்த ஸ்தானத்தில் வைத்து இருக்கிறீர்கள்? மதுவை குள்ளச்சி என்றாலும் கேட்பதற்கு அப்போது ஆள் இல்லை. கஸ்தூரி டீச்சரை சத்துணவு ஆயா என்றாலும் கேட்பதற்கு ஆளில்லை.

ரூல்ஸ்தான் என்ன?

ரூல்ஸ்தான் என்ன?

பிக் பாஸ் ரூல்ஸ்தான் என்ன? வீட்டுக்குள் அடைபட்டு கிடக்கும் அவர்கள் பிக் பாஸ் வீட்டில் எந்த மாதிரி உறவையும் வளர்த்துக் கொள்ளலாம். ஆனால், தற்கொலை முயற்சி என்பது மட்டும் விதி மீறல்கள் என்கிறீர்களா? இரவு பதினொரு மணி வரை ஒரு இளம் பெண்ணும், ஆணும் தனியாக பேசிக்கொண்டு இருப்பது பிக்பாஸ் வீட்டின் விதி மீறல்களில் இல்லையா?

அபிராமி முகேன்

அபிராமி முகேன்

முகேன் அபிராமி விஷயத்தில் படக்கென்று அபிராமியிடம் பேசி, அவர் வாயாலேயே ஐ லவ் ஹிம் என்று சொல்ல வச்ச கமல் ஹாஸன், முதல் வாரத்திலிருந்து கவினுடன் நெருங்கிப் பழகி வரும் லாஸ்லியா, அவனை எனக்கு பிடிக்கும் என்கிறார். இரவு வெகு நேரம் பேசிக்கொண்டு இருக்கிறார். இப்போது கவினை ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்கிறார். இந்த பிடிக்கும் என்பதற்கான அர்த்தம்தான் என்ன என்று கமல் இதுவரை அர்த்தம் கேட்காதது ஏன்?

லாஸ்லியாவின் பேரை கெடுக்காமல் அவரை அவரது ஊருக்கு அனுப்பி வைக்கும் நல்ல எண்ணமா பிக் பாஸுக்கு? அப்போ தமிழ்ப்பொண்ணுங்களுக்கு நீங்கள் தரும் மரியாதை என்ன?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+