Bigg boss 3 Tamil: பிக் பாஸ் வீட்டினுள் நடிகை கஸ்தூரி வெகுளியா வில்லியா?
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி உலகத்தில் உள்ள அத்தனை கோடி தமிழ் மக்களில் பல கோடி மக்கள் விரும்பிப் பார்க்கும் இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வருகிறார்.
ஒன்றாம் தேதிக்காக மாதம் முழுவதும் உழைத்துவிட்டு, சம்பளத்துக்கு காத்திருப்பது போல வாரத்தின் இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பிக்பாஸ் நிகச்சியில் கமல் வருகைக்காக பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் மட்டுமல்ல, பிக் பாஸ் ரசிகர்களும் காத்திருந்து பார்த்து ரசித்து வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நேற்று நடிகை கஸ்தூரி புதிய ஹவுஸ் மேடாக என்ட்ரி கொடுத்து இருக்கார். இவரை கொஞ்சம் வில்லங்கமானவர். சில விஷயங்களை வெகுளியாக பேசுகிறாரா, இல்லை வில்லத்தனமான பேசுகிறாரா என்று கண்டு பிடிக்க முடியாது.

சேலை பிடிக்கும்
ஒரு ஹெல்த் கேர் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்திருந்தார் கஸ்தூரி. அப்போதுதான் அவர் குத்து விளக்கு குடும்பகுத்துவிளக்கு என்று ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்த சமயம். அப்போது தான் பேச வேண்டிய டாபிக்கை மறந்து, பெண்களுக்கு சேலை உடுத்தினால்தான் அழகு. எனக்கு சேலை கட்ட ரொம்ப பிடிக்கும். இங்கே உட்கார்ந்திருக்கும் பெண்களை கேட்கிறேன்... எப்படி உங்களால் சுடிதார் போட்டுக்கிட்டு கம்ஃபர்டாக உட்கார்ந்து இருக்க முடியுது என்று கேட்டு முகம் சுளிக்க வைத்தார்.

தன்னிலை விளக்கம்
நான் குட்டி டிரஸ் போட்டுக்கிட்டு படத்துல நடிக்கறேன்னா, அது என்னுடைய தொழில். வீட்டில் அப்பாவை கவனிக்கும் போதோ, இல்லை மற்ற சமயங்களிலோ நான் அப்படி அந்த உடையுடன் இருப்பதில்லை. அப்பாவுக்கு, பிள்ளைகளுக்கு சேவை செய்யும் பெண்ணாகத்தான் இருப்பேன். பெண்களுக்கு புடவைதான் அழகு என்று கூறினார்.

கவர்ச்சி நடனம்
பிறகு இன்னொரு படத்தில் கவர்ச்சி டான்ஸ் ஆடியபோது அதற்கு ஒரு விளக்கம் சொன்னார். அதாவது என் வயதில் இருக்கும் நடிகைகளால் என் மாதிரி உடை அணிந்து கவர்ச்சி நடனம் ஆட முடியுமா என்கிற சவாலுக்காகத்தான் அந்த பாடலில் நடித்தேன் என்று கூறினார். பார்த்தாலே தெரிகிறதே, கஸ்தூரி நல்ல இளமையாக மெல்லினமாக இருக்கிறார் என்று.. இதில் இப்படி வேறு ஒரு சவால் தேவையா?

முதல் சீசன்
பிக் பாஸ் முதல் சீசனின் போது கஸ்தூரியிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தறாரே அதை பற்றி உங்கள் கருத்து என்னன்னு. நான் இன்னும் தமிழ் பிக் பாஸ் அவ்வளவாக பாரக்கவில்லை. மலையாளத்தில் மோகன்லால் நடத்துவதைப் பார்த்து வருகிறேன். நல்லாருக்கு என்று கூறினார். அப்போது வெளிப்படையாக கருத்து கூட சொல்லாத கஸ்தூரி இப்போது கோபத்தை கன்ட்ரோல் செய்ய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கார்.

கணவர் சங்கர்
அமெரிக்காவில் கணவர் சங்கர் டாக்டராக இருக்கிறார். பன்னிரண்டு, பதின்மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ள கஸ்தூரி, பெண்ணை படிக்க வைக்க வேண்டும் என்றே அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்தார். கஸ்தூரியின் பூர்வீகம் திருவண்ணாமலை. இயற்கை ஆர்வலர் என்று கூட சொல்லலாம். ஒரு காலத்தில் மிஸ் சென்னை பட்டம் வென்று பிறகுதான் நடிப்புக்கு வந்தார்.
இவரின் சமூக வலைத்தள கருத்துக்களைப் பார்த்தால் சில சமயம் இவர் வில்லியா என்பது போலவும், சில சமயம் வெகுளியா என்பது போலவும் இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் போகப் போக கஸ்தூரியின் உண்மை முகம் தெரிகிறதா என்று பார்ப்போம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications