Bigg Boss 3 Tamil: கமல்ஜி.. இந்த வாரம் வேட்டையாடி விளையாடுங்க... இது உங்க களம்!
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்க இன்றைக்கு பல பேர் பல எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.காரணம் இன்று நம்மவர் உலக நாயகன் வரப்போகிறார். இந்த வாரம் ஏகப்பட்ட விஷயங்கள் குறித்து அவர் பேச வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.
இன்னும் ஓயாத கவின் பிரச்சனை,அபிராமி இஷ்டத்துக்கு பேசுவது.முக்கியமாக சரவணன் இந்த வீட்டை விட்டு அநியாயமாக வெளியே அனுப்பப் பட்டது என்று பல விஷயங்கள்.
அதோடு, கஸ்தூரி புதிதாக ஹவுஸ் மேட்ஸாக இணைந்து இருக்கிறார். இது குறித்தெல்லாம் மனதில் எதையும் பூட்டி வைக்காமல் கமல் மனம் திறக்க வேண்டும்.

கமல் கஸ்தூரி
கமல் கட்சி ஆரம்பித்த புதிதிலிருந்தே பல கடுமையான விஷயங்களை மட்டுமே கஸ்தூரி தனது சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வந்தவர். அதோடு முன்னுக்குப்பின் முரணாக பேசுபவர். பேசுவது ஒன்று செய்வது ஒன்று செயல் படுவது வேறு ஒன்று என்பதில் கஸ்தூரியை அடிச்சுக்க ஆளில்லை. இவரை இன்று எப்படி வரவேற்க போகிறார் கமல். அதிலும் ஆவல் இருக்கிறது.

அபிராமி முகேன்
முகேன் மீது காதல் என்று அபிராமி மட்டும்தான் பிதற்றிக் கொண்டு திரிகிறார் என்றால் ,இருபத்து நான்கு வயதே ஆன முகேனுக்கு அபிராமி மீது இருப்பது என்ன? இன கவர்ச்சியா? இல்லை காதலா? எதற்காக கட்டிலை உடைக்க வேண்டும். இவருக்கு மட்டும்தான் கோபம் வருமா? இப்படி நிகழ்ச்சியில் வந்து கோபத்தை காண்பிப்பது எங்களுக்கு மட்டும் கோபம் வராதா? எங்க கோபத்துக்கும் கமல் மதிப்பு கொடுத்து இதை கண்டிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு.

எதனால் சரவணனை?
சரவணனை எதனால், இப்படி சத்தமின்றி திருட்டுத் தனமாக வெளியேற்ற வேண்டும்.அவருக்கு குடும்பத்தில் மனைவிகள் கூட மதிக்காத மாதிரி தன்னிலை விளக்கம் தர வாய்ப்பை மறுத்து.. எதற்காக யாரால் சரவணன் வெளியேற்றம். அப்படிப்பட்ட மன்னிக்க முடியாத என்ன குற்றம்தான் அவர் செய்தார்? கமல் இதற்கு விடை தருவாரா?

மூன்று வகை
இன்றைய ப்ரோமோவில் ஃபிரண்ட்ஷிப் மூன்று வகைப்படும் என்று சொல்லி ,ஒண்ணு ஃபிரண்ட்ஷிப், இன்னொண்ணு க்ளோஸ் ஃபிரண்ட்ஸ், அடுத்து ஆளையே க்ளோஸ் பண்ற ஃபிரண்ட்ஷிப் என்று கூறிவிட்டு, முகேன் உடைத்த கட்டிலை காண்பித்து இது என்ன வகை என்று கேட்கிறார். வெறும் ப்ரோமோவில் நம்மை உசுப்பேத்திட்டு, ஒன்றுமே கேட்காமல் ஜகா வாங்கி சும்மா ஜோக் சொல்லி சிரிச்சுட்டு போக வேணாம் கமல் சார்.
நாங்க வேட்டையாடு விளையாடு ஸ்டைல் எதிர்பார்க்கறோம்...
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications