என்னாது பிக் பாஸ் 3 வீட்டுல கஸ்தூரியா.. நம்பலைண்ணா இந்த போட்டோவை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இம்முறை பிக் பாஸ் வீட்டில் கஸ்தூரி இருப்பது தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சீசன்களில் இருந்து வேறுபட்டு இம்முறை பிக் பாஸ் வீடு முழுவதும் அழகழகான ஓவியங்களால் நிரப்பப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பொம்மலாட்டம், சைக்கிள் என பல்வேறு அம்சங்கள் அந்த ஓவியங்களில் இடம் பெற்றுள்ளன.

வீட்டின் உள்ளே நுழையும் இடத்தில் விரும்மாண்டி கமலின் முகம் மிகப் பெரியதாக வரையப் பட்டுள்ளது. போட்டியாளர்கள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்பது போல, எங்கிருந்து பார்த்தாலும் கமல் முகம் கண்ணாடியில் எதிரொலிக்கிறது.

கஸ்தூரி:

கஸ்தூரி:

இதேபோல், பெண்கள் படுக்கையறைக்கு செல்லும் வாசலில் பரதநாட்டியக் கலைஞரின் ஓவியங்கள் பல இடம் பெற்றுள்ளன. அதில், ஒன்று கமல் படத்திற்கு இணையாக பெரிதாக வரையப் பட்டுள்ளது. நன்றாக உத்துப் பார்த்தால் அது நம் தமிழ் நடிகை ஒருவரை ஞாபகப் படுத்துகிறது. யாரென்று யோசித்தால் அது நம் கஸ்தூரி.

எதிர்பார்ப்பு:

எதிர்பார்ப்பு:

பிக் பாஸ் முதல் சீசனில் இருந்தே கஸ்தூரியும் போட்டியாளராக வருகிறார் என்ற பேச்சு இணையத்தில் வைரலாகத் தான் உள்ளது. காரணம் மனதில் பட்டதை பட்டென்று உடைத்துப் பேசும் அவரது குணம். இதனால் பல சர்ச்சைகளில் சிக்கியபோதும், தொடர்ந்து யாருக்கும் பயப்படாமல் அதிரடியாக பதிலடி கொடுக்கும் விதத்திற்கென்றே கஸ்தூரிக்கு ரசிகர்கள் பலர் உள்ளனர்.

ரசிகர்களின் ஆசை:

ரசிகர்களின் ஆசை:

அதனால் தானோ என்னவோ, கஸ்தூரியையும் பிக் பாஸ் வீட்டில் கோர்த்து விட வேண்டும் என்பது பலரது ஆசை. கடந்த சீசனில் நடிகை விஜயலட்சுமி நடந்து கொண்டது போல், கஸ்தூரியும் யாருக்கும் அஞ்சாமல் மனதில் பட்டதை சொல்லி, சிறந்த போட்டியாளராக விளங்குவார் என்பது பலரது எதிர்பார்ப்பு.

ஓவியம்:

ஓவியம்:

ஆனால், என்ன காரணமோ கஸ்தூரிக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் வர விருப்பமில்லை. இதனால், பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பிக் பாஸ், கஸ்தூரியை வேறு வகையாக வீட்டிற்குள் வர வைத்து விட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது மேற்கூரிய அந்த அழகிய நடன மங்கையின் ஓவியத்தைப் பார்க்கும் போது. எது எப்படியோ இந்த சீசன் முழுவதும் இந்த ஓவியத்தின் மூலம் கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் தான் இருக்கப் போகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+