Bigg Boss 3 Tamil: ஏம்மா கஸ்தூரி...நல்லா சமைப்பேன்... ஆனா சைவம்தான்னு பில்டப் குடுத்நீங்க....!
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் மூன்று, முதல் இரண்டு சீஸன்கள் போல சுவாரஸ்யமாக இல்லை என்பதுதான் உண்மை. அறியாதவர்கள், தெரியாதவர்கள் என்று ஹவுஸ் மேட்ஸ் பலர் இருப்பது அவ்வளவு ஈர்க்கவில்லை.
நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசன், பஞ்சாயத்து தலைவர் போல செயல்படுகிறார்.நிறைய நடுநிலைகள் பார்க்கிறார். அதனால், இந்த சுவாரஸ்யமும் நிகழ்ச்சியில் குறைந்து போயுள்ளது.
இப்போது புதிய ஹவுஸ் மேடாக கஸ்தூரி இணைந்துள்ளார். இவர் ரொம்ப ஆர்டிஸ்டிக்கா இருக்கார் என்பது போல இப்போதைக்கு தோன்றுகிறது போகப்போக பார்க்கலாம்.

நல்ல சமையல்
கஸ்தூரி வந்தவுடனே ஹவுஸ் மேட்ஸ் கேட்ட முதல் கேள்வி ,நீங்க நல்லா சமைப்பீங்களா என்பதுதான். காரணம் நன்றாக சமைப்பவர் சரவணன்,மதுமிதா இருவரும்தான்.இதில் நம்பர் ஒன் சமையல் செய்து, ஹவுஸ் மேட்ஸை திருப்தி படுத்தியது ரேஷ்மாவும், சரவணனும்தான்.இருவரும் இப்போது இல்லாத நிலையில், ஹவுஸ் மேட்ஸ் நல்ல சாப்பாடு சாப்பிட முடியாமல் தவிக்கிறார்கள்.

ஆனால் சைவம்தான்
நல்லா சமைப்பேன்..ஆனால், சைவம் மட்டும்தான் சமைப்பேன்னு கஸ்தூரி சொன்னாங்க. நேற்று பிராண்டட் நெய் குடுத்து, இரண்டு குழுவாக ஹவுஸ் மேட்ஸை பிரித்து சர்க்கரைப் பொங்கல் செய்ய சொல்லி டாஸ்க் குடுத்தார் பிக் பாஸ். கஸ்தூரி ரொம்ப தெரிந்தவர் போல சர்க்கரை பொங்கல் செய்றேன்னு ஒரு ஆட்டம் காட்டிவிட்டார்.

ஊற வைத்தால்
கடலை பருப்பு ஊற வைத்தால் மட்டுமே வேகும். அதோடு, குக்கர் என்றால் கூட சமாளித்து விடலாம். இதை எல்லாம் அறியாத கஸ்தூரி, போடக் கூடாத ஒரு பொருளாக சர்க்கரை பொங்கலுக்கு கடலைப் பருப்பை போட்டார். அரிசியும் வேகவில்லை, கடலை பருப்பும் வேகவில்லை. இவர் சமையல் எக்ஸ்பர்ட்டாம்.

பாருங்க அசத்தல்
அடுத்து வந்தாங்க பாருங்க சாண்டி, ஷெரின், கவின், தர்ஷன், முகேன்னு...ஷெரீன் பாசிப் பருப்பை எடுத்து சூப்பரா வறுத்து வேக வைக்க, மற்றவர்கள் சேர்ந்து அரிசியை கழுவி சர்க்கரை பொங்கல் செய்தாங்க பாருங்க. சூப்பருங்கோ... அசத்திட்டாங்க!
சமையல் தெரியும்னு பில்டப் குடுத்த கஸ்தூரி எங்கே எங்கேன்னு தேடிகிட்டு இருக்கோம்...
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications