Bigg Boss 3 Tamil: சாண்டியையே வெறுப்பேற்றிய கவின்.. எல்லாம் லாஸுக்காக!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி, இப்போது சுமார் ரகம்தான். பார்க்கணுமே என்பதற்காக பார்ப்பவர்கள்தான் அதிகம். சனி, ஞாயிறுகளில் நம்மவர் வந்தும் கூட நிகழ்ச்சி களைக்கட்டவில்லை.
சரவணன் பெரும் குற்றம் செய்துவிட்டவர் போல வெளியேற்றப்பட்டது. பிக் பாஸ் வீட்டினுள் நடிகை மதுமிதா தற்கொலைக்கு முயன்றது என்று எல்லாமே புரியாத புதிராக இருக்கிறது.
இதையும் தாண்டி வீட்டினுள் நமக்கு காண்பிப்பதைப் பார்த்தால் ...எதற்கு அபிராமி, சாக்ஷி இத்தனை மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும் என்றும், இதற்கு பிக்பாஸ் ரூல்ஸ் என்ன சொல்கிறது என்றும் கேள்வி எழுகின்றது. ஆனால்,எந்த கேள்விக்கும் பதில் கிடைக்காது.

டாஸ்க்கில் நேற்று
லாஸுக்கு டாஸ்க் செய்யும் போது விரலில் அடிபட்டுட்டுத்தாம். அதை கவினிடம் பாருடா எனக்கு ரெண்டு விரலிலும் காயம்னு சொல்லி லாஸ் சிணுங்க...மருந்து போட்டாச்சுல்ல.. .சரியாகிடும் என்று கவின் சமாதானம் செய்தார். அப்போது கவின், சாண்டி, தர்ஷன், லாஸ்லியா மூவரும் ஜெயிலுக்கு பக்கத்தில் சிட்டிங் ஏரியாவில் உட்கார்ந்து இருந்தார்கள்.

விரலில் காயம்
கவின் சாண்டியிடம் அண்ணா பார்த்தியான்னு கேட்க... சாண்டி உண்மையில் சலித்துக் கொண்டு... டேய்,உண்மையில் மனசாட்சியே இல்லை உனக்கு.. தயவு செய்து அந்த பக்கம் போங்கடான்னு சொல்லிட்டு திரும்பி படுத்துகிட்டார். இல்லண்ணா ரெண்டு விரலிலும் அடிப்பட்டு இருக்குன்னு கவின் சமாளிக்க டேய் அப்பா பார்த்திட்டேன்டா.. விடுவிடுன்னு மறுபடியும் சாண்டி திரும்பிக் கொண்டார்.

சொல்லி இருக்கேன்
அடுத்து சேரன் அப்பா வர, ரெண்டு விரலிலும் அடிபட்டுருச்சுன்னு மறுபடியும் சிணுங்கினார் லாஸ். உடனே கடுப்பான சாண்டி, ஆம்புலன்ஸுக்கு சொல்லிட்டீங்களான்னு சேரனிடம் கேட்டார். சொல்லியாச்சு வந்துகிட்டு இருக்குன்னு சேரன் சொல்ல, தையல் போடணும்.. மயக்கம் வருதுன்னு லாஸ் சும்மா நடித்தார்.

லாஸ் கவின்
கடைசியில் விஜய் டிவி ப்ரோமோவில் லாஸும். கவினும் தனியாக கதைத்து கொண்டு இருப்பதை போட்டால், பின்னணியில் அய்யய்யயோ மனசு போன்ற சினிமா டூயட் பாடல்களை ஒலிக்க விடுகிறார்கள்.பிக் பாஸ் நிலைமை இப்படி ஆகிப்போச்சேன்னு சொல்றதா,இல்லை நல்ல முன்னேற்றம்னு சொல்றதா?
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications