Bigg Boss 3 Tamil: கவின் ஆட்டத்தை முடிச்சுக்கிட்டு கிளம்பறார் போல....!
Recommended Video
சென்னை: வந்த வேலை முடிஞ்சு போச்சு.. இனி ஆட்டத்தை முடிச்சுக்கிட்டு நடையை கட்ட வேண்டியதுதான் என்று கவின் இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்புவது போல ப்ரோமோ வெளியாகி உள்ளது.
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி கடைசிக் கட்டத்துக்கு வந்து இருக்கிறது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், டாஸ்க் இல்லாமல் ஹவுஸ்மேட்ஸ் ஜாலியாக உள்ளனர்.
நடந்து கொண்டு இருக்கும் பிக்பாஸ் 3 சீசனில், இலங்கை மலேசியாவில் இருந்தும் ஹவுஸ் மெட்ஸை தேர்ந்தெடுத்து தமிழக பிக்பாஸ் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

யார் இந்த கவின்
கவின் சாதாரண ஆளில்லை, அஸிஸ்டெண்ட் டைரக்டர், நடிகர் என்று இருந்தாலும், விஜய் டிவியின் செல்லப் பிள்ளை என்று கூட சொல்லலாம். சரவணன் மீனாட்சி சீரியலில் கவின் நடிக்க முடியாது என்று பின் வாங்கியதில் தொடரே நின்று போனது. இயக்குநர் எத்தனை பேர் வாழ்க்கை இதில் அடங்கி இருக்கிறது என்று போராடியும், அதுக்கு நான் என்ன செய்ய முடியும் என்று விலகிக்கொண்டார் என்கிறார்கள்.

பெரும் யுக்தியில் கவின்
கவின் வீட்டின் கடனை அடைக்கவே பிக் பாஸ் வீட்டுக்கு வந்தேன் என்று பகிரங்கமாக கூறி இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் எவிக்ஷன் ப்ராசஸில் தப்பிக்க பல யுக்திகள் கையாண்டு, அதில் வெற்றியும் கண்டவர். தேவையான வாக்குகளுக்கு உள்ளே போகும் போதே ஏற்பாடு செய்துவிட்டு போனார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. அசிஸ்டென்ட் இயக்குநர் என்பதாலேயே பிக் பாஸ் ஹவுசில் நீண்ட நாட்கள் வெளியேறாமல் இருக்க பல தந்திரங்களை கையாண்டு இன்று வரை தண்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

டைட்டில் வின்னர்
எப்படியும் டைட்டில் வின்னராக தான் வர முடியாது என்பதையும் ஒரு அசிஸ்டென்ட் இயக்குநராகவே இருந்து யோசித்து இருக்கிறார் கவின். அத்துடன் தான் வந்த நோக்கமும் நிறைவேறி கடைசி கட்டத்துக்கு வந்தாச்சு. இப்போது கையிலும் ஐந்து லட்சம் பணம் வருகிறது என்றால் சும்மா விட்டுவிடுவாரா?

இப்போது பணம்தான்
லாஸ்லியாவை உண்மையாக காதலிக்கிறாரா என்பதை கூட அவரிடமிருந்து தெரிந்து கொள்ள முடியாத ஒருவிதமான ஒரே முகபாவனையில் பிக் பாஸ் ஹவுசில் வலம் வந்துகொண்டு இருந்த கவின், டாஸ்க் என்று வந்தால்கூட சுறுசுறுப்பாக இருக்க மாட்டார். எப்போது பார்த்தாலும், படுத்து கிடப்பது, சோம்பலாகவே இருப்பது என்று இருந்தவர். அவரை பொருத்தவரை, அவர் வீட்டு பிரச்னைக்கு பணம் தேவை.

பணம்தான் தேவை
அந்த பணத்துக்காக பிக் பாஸ் ஹவுஸ் வந்தார். வாக்குகளை அள்ளும் தந்திரங்களை செய்தார். கடைசி கட்டம் தெரிந்து போக, பிக் பாஸ் வாய்ப்பளித்து இருக்கும் இந்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு நடையை கட்டிவிடலாம் என்று முடிவு செய்து இருக்கார் போலும்.லியாவின் கவலை, கண்ணீர் என்று அவரை அலட்சியம் செய்துவிட்டார்.
இதெல்லாம் சில நாட்கள் கழித்து வெளியில் பார்த்துக்கலாம். ஆனால், ஐந்து லட்சம் ரூபாய் கிடைக்குமா? நடையை கட்டுகிறார் என்றே ப்ரோமோ பார்க்கையில் தெரிகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications