Bigg Boss 3 Tamil: லாஸ்லியா கவினுக்கு தண்ணி காட்டுகிறார்?
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் ஹவுசில், கவின் சாக்ஷிக்கு காதல் கண்ணாமூச்சு என்று தண்ணி காட்டிக் கொண்டு இருந்தார். அப்போது அவரைவிட அவரது ரசிகர்களுக்கு மனசு வலித்தது.
இப்போது கவினுக்கு லாஸ் காதல் கண்ணாமூச்சு என்று தண்ணி காட்டுகிறாரோ எனும் அளவுக்கு அவர்கள் பேசும் விஷயங்கள் இருக்கின்றன.
கவினிடம் அதிகம் பேசுவதை லாஸ் தவிர்த்து வருகிறார். இப்போது கவினுக்கு ஏற்பட்டு இருக்கும் வலியைவிட அபிராமி, சாக்ஷிக்கு கவின் தந்த வலி அதிகம்.

பேசலாம் வெளியில்
நமக்கு நட்பையும் தாண்டி ஒன்னு இருக்கு. இதை பத்தி நாம் வெளியில் போயி கதைக்கலாம் என்று லாஸ் சொல்கிறார். வெளியில போயி என்ன பேசப் போறே? பாஸ்ட் பாஸ்டுதான். ஃபியூச்சரை கூட பார்த்துக்கலாம். அது நம்ம கையில்தான் இருக்குன்னு சொல்கிறார் கவின்.அதாவது, இப்பவே எஸ்,நோ சொல்லிட்டு.காதல் இருக்கா இல்லையா என்று என்பது போல அவசரப்பட்டு பேசுகிறார்.

சரியில்லை கவின்
வெளியில போயி கதைக்கலாம் என்று லாஸ் கூறிய பிறகு லாஸுடன் பேசுவதைத் தவிர்த்து தனிமையில் உட்கார்ந்து கொள்கிறார் கவின்.நாடு விட்டு நாடு வந்திருக்கும் ஓரு பொண்ணு, குடும்பத்தில் எத்தனையோ கஷ்டங்களை பார்த்து வளர்ந்த பொண்ணு உடனடியாக முடிவை சொல்ல வேண்டும் என்று கவின் எதிர்பார்ப்பது எப்படி சரியாகும்?.

லாஸ்லியா யோசனையில்
இப்போது லாஸ் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்கிற மாதிரி இருக்கிறார். லாஸ் சின்ன குழந்தை இல்லை...சும்மா ஒன்றும் அறியாதவர் போல நடிக்கிறார். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுப்பவர் அல்ல லாஸ்.ஒரு பெண்ணுடன் மூணு வருஷம் ரிலேஷன் ஷிப்ல இருக்கேன்னு அசால்ட்டா சொல்லிட்டு, லாஸிடம் காதலை புரபோஸ் செய்யும் கவின், உண்மையில் மன்மதன்தான்.

ஷெரீனை சீண்டி
கவின் ஷெரீனுடன் பஜ்ஜி சாப்பிட்டு கொண்டு உட்கார்ந்து இருக்க, ஒரு பின்ச் பஜ்ஜி எடுத்துக்க சொல்லி ஷெரீன் குடுத்தார் கவினுக்கு.எக்ஸ்கியூஸ் மி..இங்கே என்ன நடக்குதுன்னு வந்தார் லாஸ். பின் ஒரு முறை பேசுகையில் கவின் சொல்லுகிறார், ஷெரீன் கிட்ட நான் பஜ்ஜி எடுக்கும்போது உன்னோட பொஸசிவ் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சுன்னு.மனுஷன் காதல்செய்வது எப்படின்னு கிளாஸ் எடுத்தால் நல்லா சம்பாதிக்கலாம்.
ஷெரீன் இவரை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை.அவரை வச்சு கவின் ஏன் காதல் வளர்க்கிறார்? உண்மையில் கவின் ஒர்ஸ்ட்...
அதுசரி...லாஸுடன் கல்யாணம் செய்து வாழ விருப்பமா...பின்னே முன்னே இருந்த பொண்ணுகூட ரிலேஷன் ஷிப்ல இருந்த மாதிரி வாழ விருப்பமா?
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications