Bigg boss 3 tamil: ஆணென்னங்க பெண்ணென்னங்க...பசங்க பாட்டு போரடிக்குதுங்க!
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைய பேர் விரும்பிப் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. இதை வயது வித்தியாசம் கூட இல்லாமல் அனைவரும் ரசித்து பார்க்கிறார்கள்.
நம்ம வீட்டில் ஏதாவது சண்டை என்றால் நாம் பயப்படுகிறோம் .நாம் சண்டை போடுவதை குழந்தைகள் மிரள மிரள பார்ப்பார்கள்.
பிக் பாஸ் ஹவுசில் சண்டை என்றால் மட்டும் ,எல்லாரும் ரசித்து பார்ப்பது என்பது எந்த வகையில் நன்றாக இருக்கிறது என்பதுதான் சத்தியமாக புரியாத புதிராக இருக்கிறது.

சாண்டி அண்ட் கோ லூட்டி
மதுமிதா ஆண்கள் பெண்களை அடிமைப் படுத்துவதாக வாரத்தின் ஆரம்பத்தில் கருத்து தெரிவித்து பெரும் சண்டையாக மாறிப்போனது. அன்று ஆரம்பித்தனர் சாண்டி அண்ட் கோ, ஆணென்னங்க பெண்ணென்னங்கன்னு ஒரு கானா பாடல். அதை இன்று வரை அவங்க பாத்ரூம், பெட்ரூம்,லிவிங் ஏரியா, கார்டன் ஏரியா என்று எல்லா இடத்திலும் அவ்வப்போது பாடிக்கொண்டு இருப்பது நிஜமா கேட்க சகிக்கலை. போரடிக்குது

எதுவும் ஓரளவுக்குத்தான்
எதுவாக இருந்தாலும் ஓரளவுக்குத்தான்.. ஆ.. ஊன்னா சாண்டி அன்ட் கோ இந்த பாடலை பாடி பிக் பாஸ் ஹவுசில் தனித்து விடப்பட்ட பெண்களை நக்கல் செய்வது போல பாடுவது நிஜமா கண்டிக்க தக்கது. லாஸ்லியா ஒரு கர்ட்டசிக்கு கூட அடிக்கடி இப்படி பாடாதீங்கன்னு சொல்லலை. இது என்ன பண்பு. ஒரே ஒரு முறை மட்டும், அபிராமி ,ஷெரீன், வனிதா இந்த பாடலை கேட்டு ரசித்தனர். அவ்வளவுதான்.

சேர் அப்பா லாஸ்லியா
லாசலியா கவினை நான் ஓபன் நாமினேட் செய்ததில் இருந்து தன்னுடன் லாஸ் பேசுவதில்லை என்று ரொம்பவும் வருத்தப்பட்டு,கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.ஷெரீனிடம் இதை பேசிக்கொண்டு இருக்கும்போது கடந்து போன லாஸ் ஓவர் ஆட்டிடியூட். அப்புறம் என்ன இதுக்கு, சேர் அப்பா சேர் அப்பான்னு அவரின் கையை பிடிச்சுக்கிட்டே சுத்திகிட்டு இருந்தவர் லாஸ்?

வருஷம் பத்தாச்சு
என் அப்பாவை பார்த்து வருஷம் பத்தாச்சுன்னு சொன்ன, லாஸ்க்கு அப்பா ஸ்தானத்தில் உள்ளவரை எப்படி மதிக்கும் என்று தெரியாதா? சேரனின் மனது புண்பட்டு கிடக்கிறதே... அவர் நமது தமிழ் திரையுலகத்தின் ஒப்பற்ற படைப்பாளி இல்லையா? லாஸ்லியாவின் இந்த ஆட்டிடியூட் சகிக்கலை.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications