Bigg boss 3 Tamil: பகீர் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய மதுமிதா... இது உண்மையா?
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த திங்கள் முதல் அனல் பறக்குது. ஹவுஸ் மேட்ஸ் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொள்ளாத குறை மட்டும்தான் நிகழ்ச்சியில் இருக்கிறது.
அடிக்கும் செயலையும் செய்வது போல, மூகேன் அபிராமியிடன் சேரை இழுத்துக் கொண்டு எகிறியது மதுமிதா சொன்னது போல ஆணாதிக்கத்தையும் காண்பிக்கிறது.
தர்ஷனுக்கு இப்படியும் நக்கலாக கோபம் கொள்ள தெரியுமா என்பது போல நேற்று தனது புதிய முகம் ஒன்றையும் காண்பித்து இருக்கார். இயக்குநர் சேரன் புதிதாக மவுனம் சாதிக்க ஆரம்பிச்சு இருக்கார்.

என்னாச்சு மதுமிதாவுக்கு?
நேற்று புதிதாக மதுமிதாவுக்கு என்னாச்சுன்னு கேட்டவர்கள் இன்னும் சில வாரங்கள் பின்னோக்கி சென்று, பஞ்சாயத்து தலைவர்கள் டாஸ்க்கில், சாண்டியிடம் கத்தினதை நினைவு படுத்தி பாருங்கள். மதுமிதாவின் கோவம் எப்படி இருக்கும் என்று தெரியும், புரியும். மதுவுக்கு லாஸ் ஜெயிலுக்கு போகணும், அவர் தப்பிச்சு அபிராமி போனது பொறுத்துக்க முடியலை.

அடிமைத்தனம் ஆணாதிக்கம்
மதுமிதா நேற்று புது பிரச்சனையையும் கிளப்பி விட்டார். அதாவது, ஆணாதிக்கம், பெண் அடிமைத்தனம், பெண்களை யூஸ் பண்ணிக்கறீங்க... இதெல்லாம் கேட்க பகீர்னு இருந்தாலும், இது உண்மையா என்கிற கேள்வி எல்லார் மனதிலும் எழுந்து, பல விஷயங்களை சிந்திக்க வைத்துள்ளது. இருந்தாலும் இந்த விஷயம் சனிக்கிழமை பெரிய கச்சேரியை வைக்கும் அளவுக்கு பூதாகரமாக இருக்கும்.இதற்கும் கமல்ஹாசன் தலை சாய்த்துக் கொண்டு சும்மா போனார் என்றால் அவர் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு பொருத்தம் இல்லாதவர் என்றுதான் சொல்ல வேண்டும்.

வேண்டும் நியாயம்
முகேன் அபிராமி பிரச்சனை ஆரம்பித்தது வனிதா. ஆனால், அந்த விஷயத்தை அதோடு முடித்துவிட்டார். ஆனால், அபிராமி மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கார்.அவர் ஜெயிலுக்கு போக கூடாது எனும்போது, அவள் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கான்னா அவளா தேடிக்கிட்டது. அதுக்கும் இதுக்கும் தொடர்பு படுத்தாதே மதுன்னு வனிதா சொல்லியாச்சு. பிறகும், நீதி, நியாயம்னு மது புலம்பல் தாங்க முடியலை.

ஆவேசம் எதற்கு?
மதுமிதா எதற்கு ஆவேசமான, இத்தனை பெரிய வார்த்தைகளை கூறினார் என்பதற்கு என்ன காரணமாக இருக்கும்? அவரை இது குறித்து பேச வைத்தால் மட்டுமே உண்மைகள் வெளிவரும். தகாத வார்த்தைகளை மதுமிதா பேசி இருந்தாலும் தப்புதான். அவர் குற்றச்சாட்டுக்கள் வைத்து இருப்பது என்பது சாதாரண விஷயமல்ல.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications