Bigg Boss 3 Tamil: பிக் பாஸ் கன்டென்ட்டுக்காக புத்தகம் படிக்கறாங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில், கவின் ஒவ்வொருத்தரிடமா குழந்தையைப் போல தாவிகிட்டே வந்து, இப்போது லாஸ்லியாவிடம் மையம் கொண்டு இருக்கார்.

பிக் பாஸ் ஷோவுக்கு யாரும் கென்டென்ட் கொண்டு வர தேவையில்லை. அதற்காக ஒரு குழுவே செயல்பட்டு வருகிறது. சாண்டில்யன், கல்கி புத்தகங்கள் எல்லாம் படிச்சுட்டு அந்த குழு கன்டென்ட் ரெடி பண்றாங்களாம்.

விஷயம் இப்படி இருக்கையில், தான் ஒரு கன்டென்ட்டோடு விளையாட ஆரம்பிப்பதாக ஆரம்பத்தில் கவின் சொன்னார்.அதாவது அபிராமி,சாக்ஷி, லாஸ்லியா, ஷெரீன் இவங்க எல்லாம் இவரோட மாமான்ஸ் மச்சான்ஸ். இப்படி சொல்லி வந்தார்.

விளையாட்டாகவே விலகல்

விளையாட்டாகவே விலகல்

ஷெரீன் கவினின் இந்த விளையாட்டு ஆட்டத்திலிருந்து விளையாட்டாகவே விலகிக் கொண்டார்.அபிராமி கொஞ்சம் சீரியஸாக எடுத்துக்கொண்டு பேச ஆரம்பிக்கையில், கவினே அவரை கழட்டி விட்டார். இதில் சாக்ஷி கவினிடம் வசமாக மாட்டிக் கொண்டு தவியாய் தவித்தார். வீட்டில் இருக்கும் வரை அந்த நிலையிலிருந்து வெளியில் வருவது என்பது அவரால் சாத்தியப் படவில்லை.

கஷ்டம் சாக்ஷி

கஷ்டம் சாக்ஷி

சாக்ஷியின் காதல் வலி பார்க்கும் பெண்களுக்கே புரிந்த நிலையில், கூடவே சுத்திக்கொண்டு இருந்த லாஸ்லியாவுக்கு இந்த வலி தெரியாதா, புரியாதா? இன்னும் கவினுடன் இரவில் கதைத்து கொண்டு இருக்கும் லாஸுக்கு இன்னுமா புரியாது? இவரும் ஏமாந்து போனால், ஆறுதல் கூறும் வீடாக மாறுமா பிக் பாஸ் வீடு.இல்லை சண்டை போடும் வீடாக மாறுமா பிக் பாஸ் வீடு.

கன்ஃபெக்ஷன் ரூம்

கன்ஃபெக்ஷன் ரூம்

பிக் பாஸ் கன் ஃபெக்ஷன் ரூமில் பேசும் போது கூட லாஸ்லியா பிக் பாஸ் வீட்டுக்குள் உறவுகள் சாத்தியப்படும்.. புதிய உறவுகள் உருவாகும் என்பதை வெளியில் பொது மக்களில் ஒருத்தியாக பார்க்கும்போது நம்பவில்லை.ஆனால் ,இங்கு வந்தால் அது சாத்தியம்னு தெரியுது. அப்பா மாதிரி உருவாகட்டும்.. இல்லை பிடித்தவர்களுடன் உருவாகட்டும் என்றுதான் பேசுகிறாரரே தவிர உண்மையை உடைக்காத அழுத்தக்காரி லாஸ்லியா.

தர்ஷனுக்கு என்று

தர்ஷனுக்கு என்று

லிவிங் ஏரியாவில் என்னோட சப்போர்ட் தர்ஷனுக்கு தருவேன்னு சொல்லிட்டு, தனி அறையில், கவின் கூட பேச நினைப்பேன். அவன் ஜெயிக்கணும்னு ஆசைப்படுவேன். அவன் ஜெயிக்கும்போது இந்தியாவுக்கு வந்து அவனை பார்ப்பேன் என்று சொல்கிறார்.லாஸிடம் ஹானஸ்ட் இல்லை... சேரப்பா ஏமாந்த அப்பா!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+