Bigg Boss 3 Tamil: தர்ஷன் விரல் சொடக்கு மேல சொடக்கு போடுது...!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின்பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 துவங்கிய உடனே சன் டிவி உள்ளிட்ட முக்கிய சேனல்கள் கொஞ்சமல்ல நிறையவே ஆட்டம் கண்டு,அந்த நேரத்தில் தங்களது வியூவர்ஸைத் தக்க வைத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்று அடிக்கடி மீட்டிங் போட்டது என்னவோ உண்மை.
அதற்கேற்ப நிகழ்ச்சிகளை மாற்றி அமைத்ததும் உண்மை. இதில் வெற்றியும் கண்டுவிட்டது சேனல்கள் என்றுதான் சொல்ல வேண்டும் .காரணம் பிக் பாஸ் இந்த முறை டல்லடிக்குது.
சுவாரஸ்யம் இல்லாத பல விஷயங்கள் மக்களை சலிப்படைய செய்துள்ளது.பிடிக்காத சில விஷயங்கள் மக்களை கோபம் கொள்ள வைத்துள்ளது. சகிச்சுக்க முடியாத சில விஷயங்கள் மக்களை சலிப்படையவும் வைத்துள்ளது.

ஷெரீன் தர்ஷன்
தர்ஷன், ஷெரீன் இருவரும் உறவும் நன்றாகத்தான் லிமிட் கிராஸ் செய்யாமல் சென்று கொண்டு இருந்தது. பரவால்லியே என்று நாம் கொஞ்சம் ஆறுதல், ஆச்சரிய பட்டு கொண்டு இருக்கையில், நேற்று தர்ஷன் தனது சுய ரூபத்தை வெளிப்படுத்தி இருக்கார். நமக்கே கோபம் வருகையில் ஷெரீனுக்கு கோபம் வராமல் பாவம் அழுகை வந்துள்ளது.

ஷெரீனிடம் சொடக்கு
தர்ஷன் படுக்கை அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கையில், ஷெரீன் வந்து, போர்வையை இப்படி மடிக்க வேண்டுமென்று சொன்னார். எனக்கு மடிக்க தெரியும், உனக்கு இங்கே என்ன வேலை.போயி கிச்சன் டீமில் வேலையை பாருன்னு சொன்னார்.நான் கேப்டன் எங்கே வேணும்னாலும் வருவேன்னு சொல்லிட்டு மடிச்சதை பிரிச்சு போட்டுட்டு போனார். மரியாதையா மடிச்சு வச்சுட்டு போன்னு சொல்ல, முடியாதுன்னு சொன்னார் ஷெரீன்.. சொடக்கு போட்டு நீ இப்போ ஒழுங்கா மடிச்சு வச்சுட்டு போறேன்னு சொன்னார்.

ஷெரீன் கோவம்
சொடக்கு மேல சொடக்கு போட்டு தர்ஷன் போர்வையை மடிக்க சொல்ல, மறுபடியும் இப்படி பண்ணாதே தர்ஷன்.விரலை உடைச்சுருவேன்னு சொன்னார் ஷெரீன்.மறுபடியும் தர்ஷன் சொடக்கு போட, வந்து போர்வையைத் தூக்கிப் போட்டுட்டு போனார் ஷெரீன்.இதனால் அப்செட் ஆன ஷெரீன் வனிதாவிடம் இதை சொல்லி,கண் கலங்கினார்.

சேரன் சூப்பர்
அந்த புள்ள உன்கிட்டே ஒரு எதிர்பார்ப்பு இருக்கறதுனாலதானே விளையாடுது.அதை உதாசீனப்படுத்தாதேன்னு சொன்னார். எப்போதுமே பெண்கள் நம்மிடம் அன்பை எதிர்பார்க்கும் போது உதாசீனப்படுத்த கூடாதுன்னு சொன்னார். நிஜமாவே இது பிக் பாஸ் ஹவுஸுக்கு பொருந்தும்.

இருவர் உறவை கவிதை
தர்ஷன் ஷெரீனை அப்படி சொடக்கு போட்டதற்கு காரணம் வனிதா ரூம் சுத்தமா இல்லை, சுத்தம் பண்ணுங்கன்னு சொல்லிட்டு போனாராம் .அவர் மேல உள்ள கோவத்தை தர்ஷன் இவர் மீது காண்பித்தாராம். என்ன நொண்டி சாக்கு இது.ஷெரீன் தனக்கும், தர்ஷனுக்குமான உறவை ஒரு கவிதை போல விவரித்தார்.
அதாவது ஷெரீன் தனக்கும் தர்ஷனுக்குமான உறவு காதலும் இல்லாமல் நட்பும் இ ல்லாமல் ஒரு தனி பாதையில் பயணித்தது என்றாலும், எனக்கு புடிச்சு இருந்தது.என் மேலயும் கேர் எடுத்துக்க ஒரு பர்சன் இருக்கார்னு சந்தோஷமா இருந்தது, ஆனால், இப்போ ரொம்ப கஷ்டமா இருக்குன்னு சொன்னார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications