Bigg boss 3 tamil: ஆரம்பிச்சது வனிதா.. ஆனா ஜெயிலில் மாட்டிகிட்டது கஸ்தூரி
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோவாக ஜொலிக்கிறது கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் ஹோட்டல் என்று மாற்றம் செய்யப்பட்டு வனிதா விஜயகுமார் விருந்தினராக வந்திருக்கிறார்.
வந்ததுமே பல விஷயங்களை பேசியவர், கடைசியாக அபிராமி, முகேன் விஷயத்தை ஆரம்பிச்சு வச்சார். உன் மேல தப்பில்லையா முகேன் என்பது போல முதல் நாள் ஆரம்பிச்சு வச்ச விஷயம், நேத்து பத்திகிட்டு எரிஞ்சுது.
இன்று ஜெயிலில் இருக்கார் கஸ்தூரி. இப்படி ப்ரோமோவில் காண்பித்து இருக்கிறார்கள் என்றாலும், உண்மையிலும் நேற்று ஹவுஸ் மேட்ஸிடம் கெட்ட பெயர் வாங்கி மாட்டிகிட்டது கஸ்தூரிதான்.

தோத்து போயிட்டேன் ஷெரீன்
வந்த விஷயத்தை மறந்து இப்போ தோத்து போயிட்டேன் ஷெரீன் என்று அபிராமி அழுவது பாவமாகத்தான் இருக்கிறது.நேற்று மீண்டும் முகேன் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதை புரிய வைக்க அபிராமி முயற்சி செய்து கொண்டு இருக்கையில், கஸ்தூரி நின்று கொண்டு நீ பேசு..இப்போ நீ பேசு என்று நீயா நானா ஷோ மாதிரி வாய்ப்பு கொடுக்க கடுப்பாகி போனார்கள் ஹவுஸ் மேட்ஸ். முதலில் நீங்க உட்காருங்க. இது ஒண்ணும் டிவி ஷோ இல்லை என்று வனிதா மற்றும் ஹவுஸ் மேட்ஸ் கத்த ஆரம்பித்து விட்டார்கள்.

முகேன் எப்போதும்
எப்போதும் முகேன் கோவத்தில் அதை போட்டு உடைப்பது, இதை போட்டு உடைப்பது என்று இருப்பது எங்களுக்கு பிடிக்கலை .உங்களுக்கு பிடிக்குதா பிக்பாஸ். இதை வனிதா கேட்டது சரியாகத்தான் இருந்தது. தவிர நேற்று சேரை தூக்கிப் போட்டுவிட்டு, அபிராமியை அடிப்பது போல வந்த முகேனின் செயல் முகம் சுளிக்க வைத்துள்ளது. அதோடு, கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கஸ்தூரி காக்கா
வனிதா அக்கா கூட சரியாத்தான் கேட்டாங்க. புதுசா வந்திருக்கே ஒரு காக்கா..அதுதான் ரொம்ப ஆட்டம் காட்டுது. நீயா நானா ஷோ மாதிரி நடத்துதுன்னு சாண்டி, முகேன்,கவின் மூணு பேரும் பேசிக்கறாங்க. அது படி பார்த்தால் வனிதா ஆரம்பிச்சு வச்ச விஷயம் ஓகேதான். அதை ஊதி பெரிசாக்கினது கஸ்தூரிதான் என்பது போல ஆகிப் போச்சு கதை.

விஷயம் சூடு
வனிதா வந்ததும் பல விஷயங்கள் சூடு பிடிக்க ஆரம்பிச்சு இருக்கு.அது மட்டும் இல்லமால் கஸ்தூரியிடம் எதிர்பார்த்தது புஸ்ஸுன்னு போயிருச்சு. இப்போ ப்ரோமோ பார்க்கவே மக்கள் விஜய் டிவியையே பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. பார்க்க போனால் விருந்தாளியாக வந்த வனிதா கேட்க வேண்டியதை கேட்டுவிட்டு, ஹவுஸ் மேடாக தங்கி விடுவார் போலும்!
-
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications