Bigg Boss 3 Tamil: கவினுடன் கதைக்கப் பிடிக்கும் இதுக்கு என்ன அர்த்தம் லாஸ்லியா?
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி, மக்கள் காத்திருந்து விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. சரியாக இரவு ஒன்பது மணிக்கு படுக்கும் பழக்கம் உள்ளவர்களும் தூங்காமல் விழித்திருந்து நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள்.
இதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சக்ஸஸ் என்று சொல்லலாம். இப்போது பிக் பாஸ் சீசன் 3 நடந்துகொண்டு இருக்கிறது. முதல் சீசன் போலவே இரண்டாவது சீஸனும் களைக்கட்டி வருகிறது.
காதல், மோதல், புறம் பேசுதல், மதிக்காமல் பேசுதல், அழுகை என்று எதிர்பார்க்காததையும் எதிர் பாருங்கள் என்பது போல ஒரே பரபர காட்சிகள் அரங்கேறி வருது. ஸ்கிரிப்ட் எழுதினால் கூட இவ்வளவு பரபரப்பு இருக்காது.

லாஸ்லியா எப்போதும்
எப்போதும் கவினுடன் கதைக்க பிடிக்கும்னு லாஸ்லியா சொல்றாரே இதுக்கு என்ன அர்த்தம்? எனக்கு யார்கிட்டயும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை, அது எனக்குத் தேவையும் இல்லைன்னு .மற்றவர்களை எடுத்தெறிஞ்சு பேசும் லாஸ்லியா, கவினுடன் மட்டும் வலிய சென்று பேசுவதும், கையைக் கோர்த்துக் கொள்வதும் என்று பிக் பாஸ் வீட்டில் வளைய வருகிறார் கேட்டால் தோழமை என்கிறார்.

லிமிட் தெரியுமாமே
கையைக் கோர்த்தாலும் என் லிமிட் தெரியும் என்கிறார். ஆண்,பெண் நட்பில் கை கோர்த்து கொண்டு திரிவதற்கு இவர்கள் என்ன மூணாம் கிளாஸ் பிள்ளைகளா? காதலிருக்குதுன்னா ஒத்துக்க வேண்டியதுதானே. இந்த கேள்வியை சும்மா ஒன்றும் கேட்டுவிடவில்லை. அபிராமியிடம் லாஸ்லியா பேசியதை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்.

கவின் லாஸ்லியா
அபிராமியிடம் பேசும்போது, முதலில் நான் கவின் சாக்ஷி மூணு பேரும் ஃபிரட்ண்ஸா இருந்தோம். அப்போ எங்களுக்குள்ள இருக்கறது ஃபிரண்ட்ஷிப் மட்டும்தான்னு நினைச்சுகிட்டு இருந்தோம். எனக்கு இவங்ககுள்ள என்ன நடக்குதுன்னு தெரியாதுன்னு சொன்னவர், அப்போ நான்கூட கொஞ்சம் பொஸசிவ் ஆனேன்னு சொன்னாரே இதுக்கு என்ன அர்த்தம்? கவின் கூட கதைக்க பிடிக்கும், அவன் எனக்கு நல்ல ஃபிரண்ட்னு மட்டும் சொல்லும் லாஸ்லியா எ துக்கு பொஸசிவ் ஆகணும்? இதை கவனிச்சு யாராவது கேட்பாங்களா?

என்கிட்டே யாரும்
யாரும் என்கிட்டே பேச வேணாம்னு தானாக வலிய வந்து நீண்ட உரையை பெரிய ஆட்டிட்யூடுடன் ஆற்றிவிட்டுப் போகிறார்.இயக்குநர் சேரன் எதுக்கு அவரை வலிய சென்று சமாதானப் படுத்துகிறார்? சேரன் அப்பாகிட்ட கூட கதைச்சதை சொல்லணும்னு அவசியமில்லை.நீ அவர்கிட்ட போயி ,நாளைக்கு நான் போயிருவேன்னு தோணுச்சு,அதுக்காகத்தான் நாங்க கதைச்சோம்னு நீ சொல்ல வேண்டிய அவசியமில்லைன்னு சொல்றார்.சேரன் அப்பா, சேரன் அப்பான்னு முன்னுக்கு சொல்லிக்கிட்டு, பின்னுக்க லாஸ்லியா மட்டும் இப்படி பேசலாமா?
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications