Bigg Boss 3 Tamil: கமல் சாரே சொல்லியும் என்ன புண்ணியம்.. ரேட்டிங் வரலையேப்பா!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோ என்னதான் சூப்பர் ஹிட்னு சொன்னாலும், ரேட்டிங்கில் விஜய் டிவியை முன்னுக்கு கொண்டு வரவில்லை.
உண்மை கசக்கத்தான் செய்யும் என்றாலும், கமலுக்கு நிகழ்ச்சி நடத்த அதிகம் நேரமில்லை. அரசியல், பொது விஷயங்கள் ,நடிப்பு என்று இப்போது படு பிசியிலிருக்கார் கமல். அதானல், முன்பு போல அதிக நேரத்தை பிக் பாஸுக்கு நேரம் ஒதுக்குவதில்லை.
இதைத்தான் அவரது ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். அவர் நடிக்கணும், ரசிகர்கள் ரசிக்கணும். அவர் பிறவி நடிகன். அவரை விட்டுத் தந்தால் நிச்சயம் கலைத்தாய் கோவித்துக் கொள்வாள்.

ஸ்கிரிப்ட் பிக் பாஸ்
பிக் பாஸ் ஆரம்பிச்ச காலத்தில் இருந்தே பிக் பாஸ் ஸ்க்ரிப்ட் என்று ஒரு கும்பல் பேசிக்கொண்டும், எழுதியும் தீர்த்துக்கொண்டேதான் இருக்கிறது. எங்க இன்னிக்கு ஒரு டாஸ்க் வைக்கறீங்க? அதை ஸ்கிரிப்ட் இல்லாமல் இப்படியான டாஸ்க்கை பிளான் செய்ய முடியும்? மற்ற நேரங்களில் நீங்கள் அதை பேசுங்கள், இதை பேசுங்கள் என்று பேசுவதற்கு யாரும் ஸ்கிரிப்ட் எழுதித் தருவதில்லை.

இப்படி பேச்சு
இப்படி ட்ரஸ் போடுங்க, இப்படி கதைங்க என்று யாரும் ஸ்கிரிப்ட் எழுதித் தர முடியாது. மத்தபடி, டாஸ்க்குக்கான விஷயத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதித்தான் தரணும். இல்லாமல் போனால் எப்படி, என்ன விளையாட்டை அவங்க டாஸ்கா விளையாடுவாங்க.

விவாதம்,பட்டி மன்றம்
பள்ளி விளையாட்டு, பட்டி மன்றம், விவாதம் எல்லாம் வைத்து இத்துடன் கூடிய உங்களது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள் என்று எழுதி அனுப்பினால்தானே அதை செய்வார்கள். ஸ்க்ரிப்ட் என்பது பிக் பாஸில் ஒரு பகுதி மட்டுமே. மற்றது அவர்களது சொந்த இயல்புதான்.

வனிதா தாய்மை
தாய்மையில் மிளிர்ந்த அன்னை வனிதாவைத்தான் அன்னை அன்னை என்று சொல்லி கமல் ஹாசன் நெகிழ்ந்து போனார்.அதை வச்சு கூட பிக் பாஸுக்கு ஸ்க்ரிப்ட் யோசிக்கலாம் என்று அவர் சொன்னது இந்த ஒரு பகுதிக்காகத்தான். அதுவும் டாஸ்க் என்கிற ஒரு பகுதிக்காகத்தான்..
கொஞ்சம் யோசிங்க பாஸ்!
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications