Bigg boss 3 tamil: அதுக்கெல்லாம் கஸ்தூரி சரிப்பட்டு வர மாட்டார் போலயே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி பிக் பாஸ்.ஆனால், இந்த மூன்றாவது சீசன் அவ்வளவாக களைக் கட்டவில்லை என்பதுதான் உண்மை. காரணம் என்னவாக இருக்கும் என்று அவரவர் ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டியதுதான்.

நம்மவர் நிகழ்ச்சியில் ரொம்ப ஆர்வம் காண்பிக்கவில்லையோ என்பது பலரின் கருத்து.ஒருவேளை அரசியலில் கால் பதித்து விட்டதால் அடக்கி வாசிக்கிறாரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆனால், சின்ன விஷயத்தை கூட பெரிதாக்கும் பிக் பாஸ் இப்போது அதை நிறுத்திக் கொண்டது போலும்! நமக்கு போதும் போதும் என்கிற அளவுக்கு பிக் பாஸ் போரடிக்குது.

நம்மவருக்கு என்னாச்சு?

நம்மவருக்கு என்னாச்சு?

மய்யம் என்று தனது கட்சிக்கு தொடர்பாக யாராவது நடுநிலை என்பதற்கு பதிலாக அந்த வார்த்தையை கூறினால் மட்டும் குஷியாகும் நம்மவர்,, ரசிகர்களை குஷிப்படுத்த மறந்து, நிகழ்ச்சியில் தான் ஒரு தொகுப்பாளர் மட்டுமே என்று தள்ளி நிற்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல வெட்ட வெளிச்சமாகி விட்டது. ஆனால், எங்கள் உலக நாயகனை நாங்கள் அப்படி பார்த்து பழகவில்லையே.. அதனால் கொஞ்சம் நெஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. கடந்த இரண்டு சீசன்களில் தவறை தட்டிக் கேட்ட அந்த கோபம் எங்கே?

நார்மல் கஸ்தூரி

நார்மல் கஸ்தூரி

வெளியில் அப்படி இப்படி என்று மனதில் பட்டதை அப்படியே பேசி பழகிய கஸ்தூரி, பிக் பாஸ் வீட்டின் உள்ளே போய் சட்டிப் பானைகளை உருட்டும் எலி பூனை போல கலகலக்க வைப்பார் என்று பார்த்தால், மழையின் நனைந்த புஸ்வாணம் போல ஆகிப்போச்சு. அது மட்டும் இல்லை டோட்டலாக கமலிடம் சரண்டர் ஆகிட்டார். நீங்கதான் என் ஹீரோன்னு வேற சொல்லிட்டார். இப்போது கஸ்தூரி பற்றி நன்றாகவே தெரிந்து கொள்ளலாம், அவரும் ஒரு சராசரி பெண்தான் என்று. சண்டை கோபம் எல்லாம் கஸ்தூரிக்கு வெறும் ஏட்டு சுரைக்காய் என்பதைத்தான் இப்போது உணர முடிகிறது. அதை விட முகத்துக்கு முன்னே யாரைப்ப பற்றியும் இழிவாக ஒரு வார்த்தை பேச முடியாது என்கிற பண்பை குறிக்கிறது என்று கூட சொல்லலாம்.

பேக் வனிதா

பேக் வனிதா

வனிதா இன்று மீண்டும் பிக் பாஸ் ஹவுஸ் வருகிறார். வந்து நிரந்தரமாக இருப்பாரா,இல்லை விருந்தாளியாக மட்டும் ஒரு நாள் தங்கிவிட்டு சொல்கிறாரா என்பது இரவுதான் தெரியவரும்.ஒரே நாளில் கலகலன்னு ஏதாவது கலகத்தை உண்டாக்கி சென்றுவிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இவர் கொஞ்சம் கடுகு போல பொரிபவர்தான் என்றாலும், இவர் பக்கம் நியாயமும் இருக்கும். ஆனால், அதுக்கு கஸ்தூரி வொர்த் இல்லை என்று வனிதாவை இறக்கி இருந்தாலும், அதுவும் வேஸ்ட்தான் என்பது போலத்தான் இருக்கும்.

பலமே கமல்ஹாசன்தான்

பலமே கமல்ஹாசன்தான்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பலமே கமல்ஹாசன்தான் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால், அதை இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள் என்பது போல இருக்கிறது இப்போதைய சீசனில் நம்மவரின் நடவடிக்கைகள். இது அவர் எடுத்த முடிவு, யார் சொன்னாலும் அந்த முடிவில் இருந்து அவர் மாற மாட்டார். என்ன செய்வது முந்தைய இரண்டு சீசன்களின் நம்மவரை நாம் மறந்துவிட்டு, நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டியதுதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+