சிரிக்காவிட்டாலும்... சிலிர்க்க வைக்கும் சீனி முட்டாயே.. ஷிவானியை நினைத்து உருகும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிம்மதியா நாலு மணிக்கு இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு ரசிகர்களை குஷி படுத்திவிட்டு அவரும் சந்தோஷமாக இருந்தார். அவரை பார்த்து பல ரசிகர்கள் ரசித்தும் நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டு இருந்தனர்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இந்த ஷிவானி அந்த வீட்டிற்குள் இன்னும் செட் ஆகாமல் இருந்து கொண்டிருக்கிறார் . அனைவரும் இவரையே டார்கெட் பண்ணி இன்னும் எங்களுடன் செட் ஆகவில்லை என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாக ஷிவானியும் அனைவரிடமும் நன்றாக பழக ஆரம்பித்திருக்கிறார். இருந்தாலும் இவர்கள் இன்னும் இவர் பெயரை தான் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதனை பார்த்த அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

 ஜித்தனும் ஷிவானியும்

ஜித்தனும் ஷிவானியும்

இன்றைய பிரெமோவில் யார் இன்னும் இந்த வீட்டிற்குள் சுவாரஸ்யம் இல்லாமல் ஒதுங்கி இருக்கிறார்கள் என்று கேட்டதற்கு அனைவரும் ஷிவானியையும் ஜித்தன் ரமேஷையும் கூறியிருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் தனியாக ஒரு கண்ணாடி ரூமுக்குள் பூட்டி வைக்க சொல்லி இருக்கிறார்கள். இதில் அந்த வீட்டிற்குள் சென்றதும் ஷிவானி கண் கலங்கி இருப்பதை ,சூம் செய்து ரசிகர்களுக்கு காட்டி இருக்கிறார்கள். அவரை பார்த்ததும் ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி இருக்கிறார்களாம்.

கண்ணாடிக்குள் ஷிவானி

கண்ணாடிக்குள் ஷிவானி

நேற்றைய எபிசோடில் தான் இவருக்கு பிடித்தமான செல்லமா பாட்டை போட்டு பிக்பாஸ் இவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து இருந்தது .ஆனால் அதற்கு இவர் தனியாக சென்று பிக் பாஸ்க்கு நன்றி எல்லாம் சொன்னார். இனி ஜாலியாக இருப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இவரை தனி ரூமுக்குள் அடைத்துவிட்டார்கள். இதனை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் கமெண்ட்டுகளாக போட்டு வருகிறார்கள். அதிலும் பலர் இவருக்கு ஆதரவாக கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள்.

உண்மையா இருந்தா தப்பா

உண்மையா இருந்தா தப்பா

அந்த வீட்டிற்கு இருப்பவர்களில் உண்மையாக இருப்பவர் ஷிவானி தான் அவர்தான் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார். ரொம்ப பேசினால் வாயாடி என்று கூறுகிறார்கள் பேசாமல் அவருடைய வேலையை பார்த்தால் எங்களுடன் சேரவில்லை என்று அதுவும் ஒதுக்குகிறார்கள் .பாவம் என்று இவருக்கு பாசிட்டிவ் அலைகள் உருவாகி வருகிறது. அதிலேயும் சிலர் ரமேஷ் - ஷிவானி இரண்டு பேருமே அவர்களுக்கு வாய்ப்பு வரும்போது பதில் அடி அதுவும் நறுக்கென்று கொடுத்துவிட்டு தான் இருக்காங்க .

பின்னாடி விளையாடுவாங்க

பின்னாடி விளையாடுவாங்க

நிகழ்ச்சி சுவாரஸ்யத்துக்கு வேண்டுமென்றால் இது உதவும். பட் ரெண்டு பேருமே பியூச்சர் வீட்டில நல்ல விளையாடுவாங்க என்றுதான் சிலர் கூறி வருகிறார்கள். அதிலயும் சிலர் ஷிவானி தான் உங்களுக்கு இளிச்சவாய எப்பவோ அவரையே டார்கெட் பண்ணுறீங்க என்று போர்க்கொடி தூக்குகினார்கள். இது போதாதென்று நீங்க பண்றதெல்லாம் ஷிவானி மனசுக்குள்ள வச்சுட்டு அவருக்கு நேரம் வரும்போது கண்டிப்பாக உங்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார் என்று ரசிகர்கள் அவர்கள் மனதை அவர்களே சமாதானப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சீக்கிரமா வெளியே வாம்மா

சீக்கிரமா வெளியே வாம்மா

சிலரோ இவருடைய நாலு மணி போஸ்ட் பார்க்காமல் ஏங்கிப் போய் இருக்கிறார். அதனால் சீக்கிரம் இந்த வீட்டை விட்டு வெளியேற்றி விடுங்கள் அவர் வந்து இன்ஸ்டாகிராமில் அவருடைய வேலையை சிறப்பாக செய்ய வேண்டும். இந்த வீட்டிற்குள் தான் உங்களுக்கு அவரை பிடிக்கவில்லையே என்றும் கூறியிருக்கிறார்கள். அப்படித்தான் இருக்கிறார் ஷிவானியும், எப்போதும் தொங்கிய முகத்துடன்.

 விடாதே ஷிவானி விடாதே

விடாதே ஷிவானி விடாதே

இதோடு முடிக்காமல் இவருடைய வெறித்தனமான ரசிகர்கள் கூட பிக்பாஸில் வேணுமின்னே ஷிவானியை டார்கெட் பண்ணுறாரு போல யாராக இருந்தாலும் எதுக்கெடுத்தாலும் ஷிவானி ஷிவானி தான் சொல்றாங்க இந்த கன்டஸ்டன்ட் பேச்சை கேட்டுக்கிட்டு இவர் ஷிவானிய ரொம்ப டார்கெட் பண்றாரு .பிக்பாஸில் உள்ள மத்த கன்டஸ்டன்ட் உள்ள கரெக்டா ஒழுங்கா இருக்காங்களா இல்லையா என்று தன்னுடைய மனக்குமுறலை குமுறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+