Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேய்களா.. அவர் ஆம்பளை ஓவியாடா... எங்க தலை "மொட்டை"க்கு நாமினேஷனா.. தகிக்கும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 3 சீசன் களை முடித்து நான்காவது சீசனில் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் வேளையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் யாரென்று அங்கு இருப்பவர்களிடம் பிக்பாஸ் கேட்டதற்கு அனைவரும் சுரேஷ் மற்றும் ஆரி என்று கூறியிருக்கிறார்கள்.

அதில் சுரேஷ் சக்கரவர்த்தியின் பெயரைச் சொன்னதும் அவருடைய ரசிகர்கள் கொதித்தெழுந்து இன்ஸ்டாகிராமில் கமெண்ட் போட்டு தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சிகளில் சுரேஷ் சக்கரவர்த்தியின் பெயரை அதிகமானவர்கள் நாமினேஷன் லிஸ்டில் சொல்லும்போது அவருடைய ரசிகர்கள் இதுதான் குரூப்பிசமா என்று கேட்டுள்ளனர்.

 சூப்பர் சுரேஷ்

சூப்பர் சுரேஷ்

ஒருவர் அவருடைய கேரக்டரில் முழுமையாக அப்படியே இருக்கிறார். அது உங்களுக்கு எல்லாம் பிடிக்கவில்லையா என்று கன்டஸ்டன்டை வறுத்தெடுத்து கமெண்டுகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சுரேஷ் சக்ரவர்த்தி முதல் நாள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகும்போது யார் என்று தெரியாமல்தான் பலர் ரசிகர்கள் இருந்தார்கள். அதுவும் பல இளசுகள் மத்தியில் இவர் ஒருவரும் வயதானவர்கள் இருக்கும் போது இவரை இந்த வீட்டுக்குள் வைத்து இவர் என்ன செய்யப் போகிறார் என்றெல்லாம் பலரும் கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

 மொட்டை தாத்தா

மொட்டை தாத்தா

அதுமட்டுமல்லாமல் இவரை மொட்டை என்றும் மொட்டை சுரேஷ் என்றும் பல நெட்டிசன்கள் கூட கமெண்ட்களை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது இவருடைய கேரக்டரை புரிந்து கொண்ட ரசிகர்கள் இவரை தாத்தா மற்றும் சுரேஷ் சார் என்று கூட அழைக்கிறார்கள் .இருக்கு இவருடைய கேரக்டர் ரசிகர்கள் மனதில் நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 இதுதான்டா ரியல்

இதுதான்டா ரியல்

இந்த வீட்டிற்குள் பலர் உண்மையான முகத்தை மறைத்து போலியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கூட கூறும் அளவிற்கு தான் பலருடைய நடவடிக்கைகளும் அமைத்துக் கொண்டிருக்கிறது . ஆனால் அதில் கோபப்பட்டாலும் முகத்துக்கு நேராக காட்டிவிட்டு அடுத்தவர்களுக்கு கஷ்டம் என்கிற போது உதவி செய்யும் சுரேஷ் சக்கரவர்த்தியின் கேரக்டரை ரசிகர்கள் நன்றாக புரிந்து தான் அவருக்கு இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் ஆர்மி எல்லாம் உருவாக்கி வருகிறார்கள் .

 இவர் ஆம்பளை ஓவியா

இவர் ஆம்பளை ஓவியா

முதல் சீசனில் ஓவியாவுக்கு இருந்த மாதிரிதான் தற்போது இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாயிருக்கிறது. நாளுக்கு நாள் இவர் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து இருந்தாலும் உள்ளிருக்கும் கன்டஸ்டன்ட் இவரை எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகத்தான் பலரும் இந்த வாரம் இவரது பெயரை கூறிக்கொண்டு இருக்கிறார்கள் .

 அது ஈசியல்ல

அது ஈசியல்ல

ஆனால் இவருடைய ரசிகர்கள் இவர்களுக்கு எதிராக கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் .நீங்க என்ன அவருடைய பெயரை நாமினேசன் லிஸ்டில் வைக்கிறது .நாங்க அவருக்கு ஓட்டு போட்டு அந்த வீட்டை விட்டு வெளியே ஏத்த மாட்டோம் உள்ள தான் இருப்பார் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதிலயும் இவர் டாப் கன்டஸ்டன்ட் ஆக இருப்பதால் இவரை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டால் நாம் ஈசியாக ஜெயித்து விடலாம் என்றுதான் பலரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள் .

 நிஜ முகம்

நிஜ முகம்

ஆனால் அங்கு அனைவரும் நடித்துக் கொண்டிருக்கும் போது இவர் மட்டும் தான் உண்மையாக இருக்கிறார் என்று பல ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. அதிலும் இவர் போனவாரம் கேப்ரியெல்லாவை முதுகில் சுமந்து அவர் ஜெயிப்பதற்காக தனி ஒரு ஆளாக பாடுபட்டதால் ரசிகர்களுக்கு ரொம்பவும் இவரை பிடித்துவிட்டது. மக்களிடம் இவருக்கு செல்வாக்கு உயர்ந்து விட்டது என்பதை அறிந்துதான் உள்ளிருக்கும் கன்டஸ்டன்ட் கூட இவரை விரைவாக வெளியேற்ற வேண்டும் என்று முடிவெடுத்து இப்படி செயல்பட்டு வருகிறார்கள் என்று பலர் கூறி வருகின்றனர்.

 சேட்டைக்கார ரியோ

சேட்டைக்கார ரியோ

அதிலும் நாமினேஷன் லிஸ்ட் பெயர் சொல்லும் போது ரியோவின் ஆக்டிவிட்டி எதிர்பார்த்துதான் ரசிகர்கள் கூடக் கொஞ்சம் கோபத்தில் இருக்கிறார்களாம் . முதல் வாரத்தில் இவர் கூட சண்டை போட்டுக்கொண்டு இருந்த அனிதா சம்பத் கூட இவரைப் பற்றி இவர் ரொம்பவும் வெளிப்படையானவர் மனதில் இருப்பதை அப்படியே பேசி விடுகிறார் என்று கூறியிருக்கிறார். ஆனால் ரியோ இவருக்கு மாஸ்க் கொடுத்ததை சுரேஷ் சக்கரவர்த்தியின் ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் ரியோ ரியோவுக்காகவே நாங்கள் சுரேஷ் சக்கரவர்த்தியை அந்த வீட்டிற்குள் இருக்க வைப்போம் என்று சபதம் வேற எடுத்திருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+