அடங்குவாரா அனிதா.. சத்தாய்ப்பாரா சுரேஷ்.. பாய்ந்து பிறாண்டுவாரா ஷிவானி??

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை எவ்வளவுதான் பிடிக்காத தாக பலர் கலாய்ச்சு தள்ளினாலும் அதுதான் இப்ப ரெண்டா போய்க்கொண்டிருக்கிறது.

பல சீரியல்களையும் புறந்தள்ளிவிட்டு சீரியல் ரசிகர்கள் கூட இதை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது ஒவ்வொரு சீசனுக்கும் நடப்பதுதான் இருந்தாலும் இந்த சீசனில் முதலில் பலரும் திட்டித்தீர்த்த வர்களை ஒரு வாரத்திற்குள் ரசிக்க ஆரம்பித்து விட்டது .

இந்த சீசனில் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இளசுகள் அதிகமாக இருக்கிறது. இது இளைஞர்களுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக தான் இருக்கிறதாம்.

 கெட்ட ஆட்டம் போடும் சுரேஷ்

கெட்ட ஆட்டம் போடும் சுரேஷ்

ஆனால் பாருங்க, ஆட்டத்தை தொடங்கிய முதல் நாளில் இருந்து இப்ப வரைக்கும் இளசுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு எல்லாரையும் விட வயசு கூடின சுரேஷ் சக்கரவர்த்தி தான் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார். அவர் இதுவரைக்கும் பல படங்களில் நடித்திருந்தாலும் அதில் வாங்காத பெயரை இந்த ஒரு வாரத்திற்குள் வாங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்துவிட்டார் .

 மொட்டைக்குள் காமெடி

மொட்டைக்குள் காமெடி

முதலில் கோபக்காரராக அனைவரையும் திட்டி சண்டை போட்டுக்கொண்டு இருந்தாலும் அவர்களையும் கலாய்த்துக் கொண்டு அடிக்கடி இவர் செய்யும் குறும்புகளை அங்கு இருக்கும் போட்டியாளர்கள் மட்டுமல்ல ரசிகர்களும் ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இவர வெச்சு மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ்களை அள்ளி தெளித்து வருகிறார்கள் . இந்த மீம்ஸ் கிரியேட்டர்ஸ்ரால பலர் பாப்புலர் ஆகிவிடுகிறார்கள். அந்த மாதிரிதான் இப்ப இவரும் பாப்புலராகி விட்டார்.

 உரண்டை இழுக்கிறார்

உரண்டை இழுக்கிறார்

இவர் அனிதா சம்பத்துடன் சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது இவர் ரியாக்ஷனை வைத்தும் இவர் அந்த வீட்டிற்குள் செய்யும் குறும்புகளை வைத்தும் மீம்ஸ் கிரியேட் டர்கள் விதவிதமாக ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வீட்டிற்குள் இந்த வாரத்திற்கான கேப்டனாக இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சும்மாவே இவர் ஆடுவார். இப்போ சலங்கை வேற கட்டி விட்டிருக்கு கேட்கவா வேண்டும் என்று ரசிகர்கள் இவரை கலாய்க்கிறார்கள்.

 சேட்டை நல்லாதான் இருக்கு

சேட்டை நல்லாதான் இருக்கு

இருந்தாலும் இவர் இந்த வீட்டிற்குள் செய்யும் செயல்கள் தான் என்டர்டைன்மென்ட் ஆகவும் பரபரப்பாகவும் இருக்கிறது . இவர் இல்லாவிட்டால் இது முடிந்து போய் விடும் அந்த ஷோ. அதனால் இவரை இன்னும் கொஞ்ச நாளைக்கு கொண்டு வருவாங்க இவருக்கு தான் டைட்டில் வின் பண்ணுற வாய்ப்பு கூட இருக்குது. அப்படின்னு இவரை பற்றி கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் .இவரை வெறுத்தவர்கள் கூட தற்போது இவருக்கு இவரை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் .

 கேப்டனாகி தப்பினார்

கேப்டனாகி தப்பினார்

அடுத்த வாரத்திற்கான எலிமினேஷன் ரவுண்டில் இருந்ததால் தற்போது இப்போது கேப்டனாக இவருக்கு ப்ரமோஷன் கிடைத்துள்ளதால் இவரை எழிமினேஷன் செய்ய முடியாது . அதனால் இந்த வாரத்தில் இருந்தும் இவர் தப்பி விடுவார் . இந்த வாரம் இவர் கேப்டனாக இருப்பதால் வீட்டுக்குள் எக்கச்சக்க பிரச்சனைகள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையாக இவரும் கமல் முன்பே ஐ வாண்ட் மோர் ஃபைட் எனக் கூறியிருக்கிறார் .

 நிறைய சேட்டை இருக்கும்

நிறைய சேட்டை இருக்கும்

இந்த வருடம் இவர் தன கேப்டனாக இருப்பதால் அந்த வீட்டிற்குள் பல திருப்பங்களையும் செய்ய இருப்பதாக கூறியிருக்கிறார் இவர். போட்டியாளர்களால் அதிகமான ஹார்ட் பிரேக் சிம்பல்கள் குத்தப்பட்ட இவரை தேர்வு செய்தது ஆச்சரியமான விஷயம்தான். ரேகா, ஷிவானி ,சுரேஷ் சக்கரவர்த்தி மூவரில் ரேகா ,ஷிவானி யை விடவும் சுரேஷ் சக்கரவர்த்தியை போட்டியாளர்களுக்கு பிடித்துப் போய் இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது .

 அமைதியான ஷிவானி

அமைதியான ஷிவானி

ஷிவானி க்கு 4ஓட்டுகளும் ரேகாவுக்கு 2 ஓட்டுகளும் சுரேஷ் சக்கரவர்த்தி எட்டு ஓட்டுகளும் பெற்றிருக்கிறார்கள். சுரேஷ் சக்கரவர்த்தி கேப்டனாக வெற்றி பெற்றதும் அவருடைய ரசிகர்கள் இணையதளங்களில் கமெண்டுகளை போட ஆரம்பித்து விட்டார்கள். இனி இந்த வாரத்திற்கு கண்டெண்ட்க்கு பஞ்சமில்லை நல்ல என்டர்டைய்மெண்ட் இருக்கப் போகிறது என்று கூறிவருகிறார்கள்.

 அனிதா என்ன செய்வாரோ

அனிதா என்ன செய்வாரோ

ஆனால் அந்த வீட்டுக்குள் சண்டக்கோழியாக இவரும் அனிதா சம்பத்தும் சண்டைபோட்டு கொண்டிருப்பதால் அனிதா சம்பத்தின் முகத்தில்தான் ஈயாடவில்லை .இந்த வாரம் என்ன பண்ணி உயிரை வாங்க போகிறாரோ என்று அவருடைய ரியாக்ஷனை வைத்து அவரது மைண்ட் வாய்ஸ் ஆக ரசிகர்களும் கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள். பார்க்கலாம்.. அனிதா தனது விஸ்வரூபத்தைக் காட்டுவாரா அல்லது பல்பு வாங்குவாரா என்பதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+