பிக்பாஸ் வீடா? இதெல்லாம் ஒரு பொழப்பா? கமல் சாருக்கு இது தெரியலையே? பொரிந்து தள்ளிய ரேகா நாயர்
சென்னை: ஒரே வீட்டில் 100 நாட்கள் அடைத்து வைத்திருப்பது எல்லாம் ஒரு பொழப்பா, இதெல்லாம் கமல் சாருக்குமா தெரியலை என பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரேகா நாயர் வெளுத்து வாங்கியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்றைய தினம் தொடங்கியது. ஒவ்வொரு சீசன் தொடங்குவதற்கு முன்பும் அந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு எப்போதும் எழும்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அந்த வகையில் மாகாபா ஆனந்த், விஜே அர்ச்சனா (ராஜா ராணி 2 நடிகை), ரேகா நாயர் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிப்பட்டன.
ரேகா நாயர் வருகிறார் என்றதுமே பிக்பாஸ் வீடு களைகட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தொடங்கிய நிகழ்ச்சியில் மேற்கொண்ட யாருமே கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் ரேகா நாயர் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து அவர் குமுதம் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: முதலில் நான் ஏன் 100 நாட்கள் அங்கு சென்று இருக்க வேண்டும். எனக்கு பிடித்த இடத்தில் என்னால் 100 நாட்கள் என்ன 1000 நாட்கள் கூட இருக்க முடியும். எனக்கு பிடித்த உணவு இருக்கிறது. அதை 100 நாட்கள் சாப்பிட வேண்டும் என்றால் நான் சாப்பிடுவேன். ஆனால் பணத்திற்காகவும் பிரபலமடைவதற்காகவும் நான் அங்கு செல்வது எல்லாம் சரி என எனக்கு படவில்லை.
இதற்கு பதில் 100 செடி வைத்தால் கூட என்னுடைய வாரிசுகளாவது நன்றாக இருக்கும். முதல் சீசனில் எனக்குத் தெரிந்தவர்கள் சென்றார்கள். அவர்களிடமே நான் இதெல்லாம் ஒரு பிழைப்பா என கேட்டேன். இந்த மாதிரியான விஷயங்களில் எனக்கு ஈடுபாடு கிடையாது. முதல் சீசனில்தான் அந்த நிகழ்ச்சியில் ஒரிஜினாலிட்டி இருந்தது. ஆனால் போக போக ஸ்கிரிப்ட்டடாகவே உள்ளது.

பிக்பாஸில் நடிப்பதற்கு பதில் நான் சீரியலில் நடித்து விடுகிறேன், சரி பிக்பாஸுக்கு சென்றால் என்னை என்ன ரஜினி சாரின் ஹீரோயினாகவா போட போறாங்க? ஒருவருக்கு அறிவில்லை என்றால்தான் பள்ளியில் சென்றுவிட வேண்டும், நடிக்க தெரியாவிட்டால் ஆக்டிங் ஸ்கூலில் விட வேண்டும். ஒரே நாளில் பிரபலமாக பிக்பாஸ் செல்லலாம்.
ஜெயிலில் இருப்பதும் அங்கு இருப்பதும் என்னை பொருத்தமட்டில் ஒன்றுதான். பிக்பாஸ், கமல்ஹாசன் என்ற மிகப் பெரிய பிரபலத்தை வியாபாரத்தின் உச்சியாக வைத்து அவரையும் வியாபாரம் பேசுகிறது. அவருக்கும் அது தெரியவில்லை என்பது தெரியவில்லை. அவர் இதை செய்ய மாட்டேன் என சொல்லியிருக்க வேண்டும். இவ்வாறு ரேகா நாயர் பொரிந்து தள்ளியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications