பிக் பாஸ் முடிஞ்சு ஒரு வாரத்திற்குள் இந்த நிலைமையா? பூர்ணிமாவின் திடீர் பதிவு.. அந்த 5 பேரிடம் கோரிக்கை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு சில நாட்களே ஆகின்ற நிலையில் இந்த சீசனில் போட்டியாளராக இருந்த பூர்ணிமா இன்று தன்னுடைய twitter பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இந்த சீசனில் இறுதி கட்டத்துக்கு வந்த ஐந்து போட்டியாளர்களிடமும் நெகிழ்வோடு வேண்டுகோளையும் வைத்திருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் அடித்து சண்டை போட்டுக் கொண்டிருந்த போட்டியாளர்கள் வெளியே வந்ததும் பாச மழை பொழிவதை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த நிலையில் பூர்ணிமா என்ன சொல்லி இருக்கிறார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இந்த வகையில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த வார ஞாயிற்றுக்கிழமை யோடு முடிவுக்கு வந்திருந்தது. இந்த நிலையில் 18 பேரோடு இந்த சீசன் தொடங்கியிருந்த நிலையில் தடைசியில் ஐந்து போட்டியாளர்கள் இறுதிக்கட்டத்தில் இருந்தனர். அதில் தினேஷ், அர்ச்சனா, மாயா, விஷ்ணு, மணி ஆகிய ஐந்து பேரும் இருந்த நிலையில் இந்த சீசன் டைட்டில் வின்னராக அர்ச்சனாகவும் ரன்னராக மணியும் அதைத் தொடர்ந்து செகண்ட் ரன்னராக மாயாவும் பெயர் வாங்கி வாங்கி இருந்தனர்.
இந்த நிலையில் மாயாவோடு நெருங்கிய தோழியாக இருந்த பூர்ணிமா இந்த சீசனின் அதிக நாட்கள் இருந்தார். ஆனால் 16 லட்சம் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு கடைசி வாரத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார். இந்த நிலையில் இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அந்த பதிவில் பைனலுக்கு வந்த ஐந்து பேருக்கும் வாழ்த்துக்கள்.
நான் முன்பே சொன்னது போல வெற்றி பெறுவது அவ்வளவு ஈஸியானது அல்ல நீங்கள் இந்க சீசன் முழுவதும் உயிர்பிழைத்து இருந்திருக்கிங்க. அது எங்கள் அனைவருக்கும் பெருமையாக இருக்கிறது. வெற்றியாளர் அர்ச்சனாவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். அர்ச்சனா நன்றாக விளையாடிய பெண். நானும் உங்களுடன் வீட்டிற்குள் செலவழித்த நேரம் மிகவும் பிடித்திருந்தது.
நீங்க வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கீங்க, கண்டிப்பா வருவேன். சோறு போடுங்க... அப்படியே அந்த ட்ரிப் முக்கியம் என்று அர்ச்சனாவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு அடுத்ததாக மணியைப் பற்றி பேசி இருக்கிறார். அதில் நீங்கள் ஒரு வேடிக்கையான நபர் நிகழ்ச்சியில் உங்கள் இருப்பை நான் ரசித்தேன் மற்றும் வாழ்த்துக்கள்டா மணி என்று கூறி இருக்கிறார்.

அடுத்ததாக மாயா நீ என் போராளி என் உண்மையான வெற்றியாளர். என் கஷ்டங்களை சொல்ல வேண்டியது எல்லாம் கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம் தணிப்போம், லவ் யூ சகோ... என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதைத் தொடர்ந்து தினேஷ் பற்றி பேசியிருக்கிறார். அதில் தினேஷ் நீங்க குளிர்ந்த ஆன்மா வீட்டிற்கு வெளியே கேம் விளையாடாத தினேஷை பார்க்க காத்திருக்கிறேன் என்று உள்குத்தோடு சொல்லிவிட்டு தினேஷுக்கு வாழ்த்துக்களும் கூறியிருக்கிறார்.
அதை தொடர்ந்து கடைசியாக விஷ்ணுவிற்கு ஆல் த வெரி பெஸ்ட்..., நான் சொன்னது போலவே நான் உங்களிடம் போனில் பேசிக் கொண்டிருக்கிறேன். இதுபோல நம்ம தொடர்பில் கடைசி வரைக்கும் இருக்க வேண்டும் என்று இவர்கள் ஐவரை பற்றியும் பூர்ணிமா அந்த பதிவில் பேசி இருக்கிறார்.
இதற்கு ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அர்ச்சனாவோடு மாயா பேசியதற்கு கடைசி நேரத்தில் கூட என்னவெல்லாம் பூர்ணிமா செய்தார். ஆனால் வெளியே வந்ததும் அதை எல்லாம் மறந்து விட்டு இப்படி பேசுகிறாரே..!? இதில் எது நிஜம் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications