விசித்ராவுக்கு இவ்வளவு பண திமிரா? நேற்று பூர்ணிமாவிடம் சொன்ன அந்த வார்த்தை தவறு.. கொந்தளிக்கும் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் விசித்திராவை நேற்றைய எபிசோடில் பூர்ணிமாவிடம் பேசிய வார்த்தைக்காக ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.
அதற்கு காரணம் என்னவென்றால் தற்போது நடந்துவரும் பணப்பெட்டி டாஸ்க்கில் யாரும் பணத்தை எடுக்கவில்லையே என்று விசித்திரா புலம்பி கொண்டிருக்க அதற்கு பூர்ணிமா அப்போ நீங்களே உங்களுக்கு வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளலாமே என்று கூறி இருக்கிறார்.
அதற்கு விசித்திரா எனக்கு அந்த பணம் எல்லாம் தேவையில்லை... என்னுடைய ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஏற்கனவே என்கிட்ட நிறைய பணம் இருக்கு, எனக்கு அதுவே போதும். இந்த பணம் தேவையில்லை என்று கூறினாராம். இதை குறித்து ரசிகர்கள் விசித்திராவை விமர்சித்து வருகிறார்கள்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. இன்று 95 வது நாளில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் மூன்று நாட்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் யார் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் மாறி மாறி ஒருவரை ஒருவர் உசுப்பேத்தி வருகிறார்கள். யாராவது பணத்தை எடுத்துக் கொண்டு போய்விட்டால் நல்லது என்று எல்லோருமே நினைத்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் போடும் நாடகத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் கடுப்பாக தான் இருக்கிறது. ஆனாலும் அடுத்து என்ன நடக்குமோ என்று ஆர்வத்தில் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் நேற்று யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் பிக் பாஸ் வீட்டிற்குள் நடைபெற்றிருக்கிறது. அது குறித்து தான் இணையத்தில் அதிகமானோர் பேசி வருகிறார்கள். அதாவது பணப்பெட்டி வைத்து நேற்று இரண்டாவது நாள் என்பதால் மாலை நேரத்தில் 9 லட்சம் ரூபாய் பணம் இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் பூர்ணிமாவிடம் விசித்திரா அதான் ஒன்பது லட்சம் பணம் வந்துட்டே யாராவது எடுத்துட்டு போக வேண்டியது தானே?
இவ்வளவு பணம் இருக்கும் போது யாருக்கும் எடுக்கணும்னு தோணலையா? என்று புலம்பி கொண்டு இருந்திருக்கிறார். அதற்கு பூர்ணிமா இவ்வளவு பீல் பண்றீங்களே அப்போ நீங்களே அந்த பணத்தை எடுக்க வேண்டியதுதானே என்று சொல்ல, எனக்கு இந்த பணமெல்லாம் ஒரு பெரிய விஷயமா? என்னுடைய சம்பளம் உங்க எல்லாரையும் விடவும் அதிகம் என்று விசித்திரா பேசியிருந்தாராம்.
இந்த காட்சிகள் 24 மணி நேரத்தில் ஒளிபரப்பாகி இருக்கிறது. ஆனால் ஒரு மணி நேர எபிசோடில் காட்டப்படவில்லை. இதனால் ரசிகர்கள் இந்த கிளிப்ஸ்களை இணையத்தில் பகிர்ந்து விசித்திராவிற்கு இவ்வளவு பணம் இருக்கிறது என்று திமிரில் இருக்கிறாரே அப்போ எதற்கு அவர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார்? இந்த விளையாட்டை அவர் விளையாட வராமல் இருந்திருந்தால் அவருக்கு பதிலாக வேறு ஒரு போட்டியாளர் வந்திருப்பார்.
அவருடைய வாழ்க்கைக்காவது அது பிரயோஜனமாக இருந்திருக்குமே, பணம் இருக்கிற திமிரில் விசித்திரா ஒவ்வொரு இடத்திலும் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்து கொள்கிறாரா என்று பலர் திட்டி வருகிறார்கள். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் தினேஷ் மற்றும் விசித்ராவிற்கு இடையே பெரிய கருத்து மோதல்கள் நடைபெற்று வருகிறது. இதனால் இவர்கள் இருவருடைய ரசிகர்களும் மாறி மாறி கமாண்டுகளில் போர் தொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் புதியதாக விசித்திரா இந்த பிரச்சனையிலும் மாட்டியிருப்பது தினேஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. அதனால் விசித்திராவை கலாய்த்து திட்டி தீர்த்து வருகிறார்கள். ஏற்கனவே கடந்த வாரத்தில் தினேஷுடைய பர்சனல் வாழ்க்கையை குறித்து விசித்திரா பேசியிருந்தார். அப்போதும் பூர்ணிமா நீங்க பேசுனது தவறு என்று குறிப்பிட்டு விசித்திராவிற்கு அட்வைஸ் செய்திருந்தார்.
அதோடு நீங்கள் தினேஷ் வாழ்க்கையை பற்றி இத்தனை பேர் பார்க்கும் நிகழ்ச்சியில் பேசுகிறீர்களே அதுபோல தினேஷ் உங்களுடைய பர்சனல் வாழ்க்கையை பற்றி பேசினால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? உங்கள் கணவர் உங்களை திருமணம் செய்தது தவறு என்று தினேஷ் சொன்னால் அது சரியா வருமா? என்று கேட்க, அது எப்படி சரியா வரும் ? அது தவறு என்று விசித்திர சொல்லி இருந்தார்.

ஆனாலும் அப்போதும் தினேஷ் நண்பனாகவும், ஒரு அம்மாவுக்கு நல்ல பையனாகவும் இருக்கலாம்.. ஆனால் அவரால் ஒரு நல்ல கணவராக இருக்க முடியாது என்று மீண்டும் மீண்டும் சொல்லி இருந்தார். இந்த நிலையில் இப்போது அடுத்ததாக பண விஷயத்திலும் விசித்திரா வாயை கொடுத்து மாட்டியிருக்கிறார்.
ஆனாலும் அடிக்கடி சர்ச்சைகள் சிக்கி பல பேர் திட்டிக் கொண்டிருக்கும் பூர்ணிமா விசித்திராவிடம் முகத்துக்கு நேராகவே அவருடைய குறைகளை சுட்டிக்காட்டி கொண்டிருக்கிறார். இதையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications