மாயாவை ஜெயிக்க வைக்க நடக்கும் தில்லாலங்கடி வேலை.. கொத்தாக மாட்டிய ‘ஐடிகள்’.. அதுவும் யாருன்னு பாருங்க
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிவரும் நிலையில் இப்போது மாயாவிற்கு பிஆர் டீம் வேலை செய்வதை குறித்து ரசிகர்கள் ஆதாரத்தோடு சில ஸ்கிரீன்ஷாட்களை வெளியிட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே இந்த சீசனில் பலர் பிஆர் வைத்து தங்களுக்கு ஓட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
அதில் இந்த வாரம் நாமினேஷனில் இருக்கும் மாயாவிற்கு வடமாநிலத்தவர்கள் பலர் ஓட்டு கேட்டு வெளியிட்ட போஸ்ட் இப்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியையும் சர்ச்சைகளையும் பிரித்துப் பார்க்க முடியாது என்று சொல்லலாம். ஆரம்பமான முதல் சீசனில் அதிகளவில் அந்த நேரத்தில் இணையதளம் வசதி இல்லாததால் பெரிய அளவில் சர்ச்சைகளை சந்திக்காமல் இருந்தது. ஆனாலும் ஓவியாவின் மருத்துவ முத்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுபோல ஜூலியின் பொய் கூட இப்போது வரைக்கும் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு சிலர் தாங்கள் வாங்கி வைத்திருந்த பெயரும் புகழையும் இழந்திருப்பதை பார்க்க முடியும். ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில சம்பவங்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. அதைப் பற்றி எத்தனை வருடங்கள் ஆனாலும் ரசிகர்கள் மறக்காமல் பேசிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடியும்.

அது போல இந்த ஏழாவது சீசன் தொடங்கிய நாளிலிருந்து அதிகமான சண்டை சச்சரவுகள் தான் இருந்து வருகிறது. கடந்த சீசனிலும் கூட வார நாட்களில் அதிகமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அசீமை வார இறுதி நாட்களில் கமல் கழுவி கழுவி ஊத்தி வருவதும் ஆனால் அவருக்கு அதிகமான ஓட்டுகள் கிடைப்பதும் வாடிக்கையாக இருந்தது.
அதனால் அசீமுக்கு அதிகமாக பிஆர் டீம் வேலை பார்த்தது என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அசீம் வெற்றி பெற்றதை கூட பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கருத்து கூறி வந்தனர். அதுபோல இந்த சீசனிலும் ஆரம்பத்தில் இருந்தே சில போட்டியாளர்கள் அவருக்கு பி ஆர் டீம் வேலை பார்க்கிறது, இவருக்கு பிஆர் டீம் வேலை பார்க்கிறது என்று வீட்டிற்குள்ளே அடிக்கடி பேசிக் கொண்டிருந்ததை பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் இந்த வாரம் மாயா எலிமினேஷனுக்காக நாமினேஷனில் இடம்பெற்று இருக்கும் நிலையில் மாயா வெளியேறிவிட வேண்டும் என்பது பலருடைய கருத்துகளாக இருக்கிறது. ஆனால் ரசிகர்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக இன்னொரு வேலையும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை சில ரசிகர்கள் ஆதாரத்தோடு நிரூபித்திருக்கின்றனர்.

அதாவது ட்விட்டர் பக்கத்தில் மாயாவிற்கு வாக்கு கேட்டு பல வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் ஐடிகளில் இருந்து பதிவு வெளியாகியிருக்கிறது. இதனால் மாயாவிற்கு வடமாநிலத்தில் உள்ளவர்களை வைத்து பி ஆர் டீம் வேலை பார்க்கிறார்கள் என்று ரசிகர்கள் அம்பலப்படுத்தி வருகிறார்கள். அதுபோல இதுவரைக்கும் இந்த சீசனில் அர்ச்சனாவுக்கு பி ஆர் டீம் வேலை பார்க்கிறார்கள் என்று சிலர் கலாய்த்து வந்த நிலையில் அப்போ இந்த சீசனில் மக்கள் ஓட்டு போட்டு பிரயோஜனம் இல்லையா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications