பிக் பாஸ் வீட்டிற்குள் பிரதீப் ஆண்டனி ரீ என்ட்ரியா? ரொம்ப யோசிக்காதீங்க.. கறி குழம்பு சாப்பிடுங்க
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் பிரதீப் ஆண்டனி மீண்டும் வரப்போகிறாரா என்று சமூக வலைத்தளங்களில் பலரும் விவாதம் செய்து வரும் நிலையில் ரொம்ப யோசிக்காதீங்க உங்க சப்போர்ட்டை எல்லாம் நான் படம் பண்ணும் போது குடுங்க என்று பதிவிட்டுள்ளார் பிரதீப்.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். விதிப்படி பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும். பிக்பாஸ் கடந்த ஆறு சீசன்களுமே மிக விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்தது பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனையடுத்து பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. 2 வீடு என்று ப்ரோமோ செய்யப்பட்டது. புது விதமாக இந்த சீசனில் மட்டும் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என்ற கான்சப்ட்டை கொண்டு வந்தனர்.

அதாவது கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு பிடிக்காதவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள். அவர்களே பிக்பாஸ் வீட்டாருக்கு அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பார்கள்.
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது. பிக் பாஸ் 7ம் சீசனில் இருந்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு முன்பு வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து நெட்டிசன்கள் கமல்ஹாசன், விஜய் டிவி என எல்லோரையும் ட்ரோல் செய்தனர். பலரும் மினி குறும்படங்களை சமூக வலைத்தளங்களில் பிரதீப்புக்கு ஆதரவாக பதிவிட்டனர். இதனால் பிரதீப் ரீஎன்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியே வந்த பிறகு நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதியன்று அவருக்கு வாழ்த்துகளை கூறிவிட்டு, 'தீர விசாரிப்பதே மெய்' என்ற ஹேஷ்டேக்கையும் டேக் செய்திருந்தார். இதற்கான பதிலை சனிக்கிழமை எபிசோடில் கொடுத்தார் கமல்ஹாசன், தீர விசாரித்ததனால் வந்த தீர்வு இது என்று கூறினார்.
சனிக்கிழமையன்று எபிசோடில் பேசிய கமல் அந்த ரெட் கார்டு முடிவை எடுத்தது போட்டியாளர்கள் தான் என்றும், அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல பேசினார். மேலும் பிரதீப் செய்த தவறுக்கு கிடைத்த தண்டனை அது என்றும் கூறினார் கமல்ஹாசன்.
இது தீர்ப்பு அல்ல என்றும், குற்றம் செய்தவர்கள் அதற்கான விளைவுகளை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதே நியதி என ஆணித்தனமாக கூறினார். அப்போ குற்றஞ்சாட்டியவர்கள் யோக்கியமா? என்று கேட்டால் அந்த கேள்விக்கு அவர்கள் நடத்தை பதில் சொல்லும். அதற்கான விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள் என்றும் கூறினார் கமல் ஹாசன்.

இதற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதில் சம்பந்தப்பட்ட பிரதீப் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளார். நேற்றைய தினம் பிரதீப் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். "எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். ரொம்ப எல்லாம் யோசிக்காதீங்க. நான் ஜாலியா தான் இருக்கேன்." "போய் பட்டாசு வெடிக்கிறதுனா வெடிங்க. கரி குழம்பு சாப்பிடுங்க. வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க. உங்க சப்போர்ட் எல்லாம் நான் படம் பண்ணும்போது குடுங்க" என பிரதீப் பதிவிட்டு இருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் என்பது 100 நாட்களுடன் முடிந்து விடும். பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேறிய, வெளியேற்றப்பட்ட பலருக்கும் அந்த கால கட்டத்தில் மக்கள் ஆதரவு இருந்தாலும் அதற்குப் பிறகு திரை துறையிலோ, சின்னத் திரையிலோ பெரிய அளவில் பிரபலம் அடைய வாய்ப்பு கிடைக்காமலேயே போய் விடுகிறது.
செய்தியாளர் அனிதா சம்பத்திற்கு செய்தி வாசிப்பாளராக இருந்த போது கிடைத்த வரவேற்பு பிக்பாஸ் வீட்டிற்கு போன பிறகு கிடைக்கவில்லை. அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை. ஓவியாவிற்கு ஆர்மியே ஆரம்பித்தனர். இதே போல ஒவ்வொரு சீசனிலும் சர்ச்சையோடு வெளியேற்றப்பட்டவர்கள் பலருக்கும் சில நாட்கள் பரபரப்பாக பேசப்பட்டாலும் கலைத்துறை வாழ்க்கையில் வெற்றி கிடைப்பது எட்டாக்கனியாகவே உள்ளது. எனவேதான் உங்க சப்போர்ட் எல்லாம் நான் படம் பண்ணும்போது குடுங்க என்று பதிவிட்டுள்ளார் பிரதீப்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications