பிக் பாஸ் வீட்டில் தெறித்து ஓடினாரே ஸ்ரீ.. காதலியால் இந்த நிலைமை? நடிகர் சங்கம் உடனே வரணும்: பிரபலம்
சென்னை: நடிகர் ஸ்ரீ-யின் வீட்டிற்குள் சென்று, வெளியே அழைத்து வந்து, மருத்துவமனையில் அனுமதித்து, அவரை காப்பாற்ற வேண்டியது நடிகர் சங்கத்தின் பொறுப்பு.. ஆனால், இதை நடிகர் செய்யுமா தெரியவில்லை.. நடிகர் சங்கம் செய்ய வேண்டிய கடமைகளில் இதுவும் ஒன்று.. பார்வைக்கு வீடியோ சென்றும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது தவறு" என்று மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கருத்து கூறியிருக்கிறார்.
மேலாடை அணியாமல், வெள்ளை நிற தலைமுடியை நீளமாக வளர்த்துவிட்டு, நடிகர் ஸ்ரீ-யின் சில வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.. எலும்பும் தோலுமாக உள்ள ஸ்ரீ-யின் வீடியோ அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தாலும், குழப்பம், சந்தேகத்தையும் சேர்த்து தந்துள்ளது..

இந்நிலையில், Whistle Plus என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன், "ஸ்ரீ-யின் வீடியோக்களை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது.. போதை பழக்கத்திற்கு ஆளாகிவிட்டாரா? ஆனால் மனநோயாளியாக ஆகிவிட்டார்.. அவரை அங்கிருந்து காப்பாற்றி வெளியே கொண்டு வருவது திரையுலகத்தின் பொறுப்பு..
உறவினர்கள், பெற்றோர்கள், தெரிந்தவர்கள் என யாருமே ஸ்ரீக்கு பககத்தில் இல்லை போலும். ஒருவேளை இருந்திருந்தால், இந்த அளவுக்கு விட்டிருப்பார்களா.. கண்டிப்பாக காப்பாற்றியிருப்பார்கள்.. ஆனால், அவரது முகம், முடி எல்லாமே மாறியிருக்கிறது.. அழகான, சாந்தமான முகம், மென்மையான குரல் கொண்டவர் ஸ்ரீ.
தனுஷ், சிம்பு கரிசனம்
இந்த விஷயமெல்லாம் நமக்கு தெரிந்திருக்கும்போது, நடிகர் சங்கத்துக்கும் இந்த வீடியோ சென்றிருக்கும்.. எனவே, உடனடியாக ஸ்ரீ-யின் வீட்டிற்குள் சென்று, வெளியே அழைத்து வந்து, மருத்துவமனையில் அனுமதித்து, அவரை காப்பாற்ற வேண்டும். ஆனால், இதை நடிகர் செய்யுமா தெரியவில்லை.. நடிகர் சங்கம் செய்ய வேண்டிய கடமைகளில் இதுவும் ஒன்று.. பார்வைக்கு வீடியோ சென்றும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது தவறு..
ஆனால், சில நடிகர்கள் தனிப்பட்ட முறையிலேயே பலருக்கும் உதவுகிறார்கள்.. தனுஷ் போலவே சிம்புவும் உதவி செய்வார். ஆனால், இதை அவர்களிடம் கொண்டு செல்வது யார்?
காதல் தோல்வி
தனக்கு வாய்ப்பு தந்த இயக்குனர்களிடம் ஸ்ரீ, தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தாரா? தெரியவில்லை. ஆனால, நண்பர்கள் இல்லாமல் இருந்தால் பெரும்பாலும் இப்படித்தான் ஆகும்.. நண்பர்கள் என்றாலே அவர்கள் மருந்துதான்.. நண்பர்கள் இருந்தால் பெருங்கவலையிலிருந்து மீண்டுவிடலாம்.. ஸ்ரீ விஷயத்தில் என்ன நடந்தது தெரியவில்லை.. ஒருவேளை ஸ்ரீ-யின் நண்பர்களும் குடிகார கூட்டமா தெரியவில்லை.
காதல் தோல்வி போல வீடியோவில் பேசுவதை வைத்து எதுவும் சொல்ல முடியாது.. ஏனென்றால் மனநோயாளியாகிவிட்டால், காதலி இல்லாவிட்டாலும், இருப்பது போலவே பேசத்தோன்றும்.. இதுபோன்ற மனநிலைமையில் அவர் பேசுவதை வைத்து, உண்மை என்று எதையுமே எடுத்து கொள்ளக்கூடாது.. இவர்களுக்கென தனி உலகம் இருக்கும்..
பிக்பாஸ் வீடு
பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ஸ்ரீ, தெறித்து ஓடினாரே, அவரை யாராச்சும் பார்த்தீங்களா? என்று சோஷியல் மீடியாவில் அவ்வப்போது சிலர் கமெண்ட்களை பதிவிட்டு வந்தனர். ஒருநாளிலேயே தெறித்து ஓடியதை டிராமா என்றுதான் சிலர் சொன்னார்கள். ஒருநாள் கூட அந்த பிக்பாஸ் வீட்டுக்குள் அவரால் தாக்கு பிடிக்க முடியாமல் போனதற்கு காரணம் இப்போதுதான் புரிகிறது. உண்மையிலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற அவருக்கு தோன்றியிருக்கிறது" என்றார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications