Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முறுக்கிய மீசையோடு போஸ்ட் போட்ட பாலாஜி.. அசந்து போன ரசிகர்கள் !

Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் ஒரு ஆணழகன் என்பதை நிரூபிக்கும் வகையில் வேஷ்டி சட்டையில் கலக்கலாக முறுக்கு மீசையை முறுக்கியபடி மாஸ் காட்டிய பாலாஜியின் லேட்டஸ்ட் வீடியோக்களை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து பல சீசன்களில் கலக்கி கொண்டிருந்தாலும் கடைசியாக ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நாலாவது சீசனில் ரன்னர் ஆக வந்த பாலாஜியை யாரும் மறக்க முடியாது.

ஆளுதான் ஆறடி உயரத்தில் ஜிம் பாடி ஆக இருந்தாலும் நானும் ஒரு குழந்தை மாதிரி தான் என அடிக்கடி ரசிகர்களுக்கு நிரூபித்து வருகிறார்.

ரசிகர்களின் செல்லம்

ரசிகர்களின் செல்லம்

பல ரசிகர்களின் செல்ல தலைவனாக வலம் வந்து கொண்டிருக்கும் பாலாஜி லேட்டஸ்டாக வெளியிட்ட வீடியோவை பார்த்ததும் சொக்கிப் போன ரசிகர்கள் அவரை கமெண்ட் களால் கிறங்கடித்து வருகின்றனர். பாலாஜி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு ஆணழகன் எனும் பட்டத்தை பெற்றிருந்தாலும் மாடலாக கலக்கிக்கொண்டு இருந்தாலும் அந்த அளவுக்கு அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்தது கிடையாது .

முதல் நாளிலிருந்தே தனித்தன்மை

முதல் நாளிலிருந்தே தனித்தன்மை

ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் முதல் நாளிலிருந்தே இவருடைய தனித்தன்மையினால் அனைத்து ரசிகர்களிடம் இருந்தும் இவர் தனியாகவே இருந்து வந்தார் .அதனாலேயே பலருக்கும் இவரைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது . சில நேரங்களில் முரட்டுத்தனமாகவும் பின்பு குழந்தைத்தனம் உள்ள வளர்ந்த குழந்தையாகவும் இவர் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து விட்டார் .

ஜாஸ்தி ரசிகர்கள்

ஜாஸ்தி ரசிகர்கள்

அதனால் தான் இவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரால் ரசிக்கப்பட்டு வந்திருக்கிறார். இவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு இருந்ததற்கும் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததற்கும் ரொம்பவே வித்தியாசத்தை உணர்ந்து இருக்கிறார் .அவர் மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களும் உணர்ந்திருக்கிறார்கள் .இவருக்காக தற்போது பெரும் ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது .

செம பிசி

செம பிசி

அதுவுமில்லாமல் மக்களும் இவரை ரொம்பவே விரும்புவதால் தான் பல கடை திறப்பு விழாக்களுக்கும் இவரை அழைத்து வருகின்றனர் இதற்கு முன்பு இவருக்கு இந்த அளவில் ரசிகர்கள் இல்லை என்றாலும் அப்போதும் கூட இவருடைய ஜிம் பாடியை பல ரசிகர்கள் ரசித்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள் .தற்போது வேட்டியை தூக்கி கட்டி கலக்கலாக இவர் ரீல் வீடியோ ஒன்றை எடுத்திருக்கிறார். இவரிடம் அடிக்கடி இவருடைய ரசிகர்கள் நீங்களும் ரீல் வீடியோ வெளியிடுங்கள் என கேட்டுக்கொண்டிருந்தனர் .

ரசிகர்களின் ஆசையைத் தீர்க்க

அதனால் ரசிகர்களின் ஆசையை தீர்ப்பதற்காக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதனைப் பார்த்ததும் மிரண்டு போன ரசிகர்கள் கமெண்ட் களால் கொஞ்சி வருகின்றனர் .அதுவும் கருப்பு கலர் சட்டையில் வெள்ளை நிற வேட்டியில் பெண்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் மாயக்கண்ணன் ஆக இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார் ,இவருக்கு இன்ஸ்டாகிராமில் அதிகமான ரசிகர்கள் இருப்பதால் இந்த வீடியோக்களை அவருடைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+