Bigg Boss: இந்த புத்திக்கு செருப்பால அடிக்கணும் – பிக்பாஸ் போட்டியாளர் கம்ருதீனை தாறுமாறாக தாக்கிய ரவீந்தர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், போட்டியாளர்களின் பொறுப்பற்ற தன்மையாலும், விதிகளுக்கு மரியாதை கொடுக்காததாலும் நிகழ்ச்சி மீது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு நிலவுகிறது. குறிப்பாகப் போட்டியாளர்கள் வி.ஜே. பார்வதி மற்றும் கம்ருதீன் மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தயாரிப்பாளர் ஃபேட் மேன் ரவீந்தர் வெளிப்படையாக கம்ருதீனைத் விமர்சித்து பேசிய வீடியோக்கள் பரவி வருகின்றன.

Bigg Boss Bigg Boss Tamil Vijay Sethupathi Kemi

ரவீந்தரின் கண்டனம்

போட்டியாளர்களின் செயல் குறித்து பேசிய ஃபேட் மேன் ரவீந்தர், கம்ருதீன் மீது தன்னுடைய கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார். அதில், "கம்ருதீனை இந்த நிகழ்ச்சியை ரொம்பச் சிறப்பாக எடுத்துக்கொண்டு போவார் என்று நினைக்காதீர்கள். விஜய் சேதுபதி சார் உங்களுக்கு நிறையப் பொறுப்பு இருக்கிறது" என்று ஆரம்பித்துள்ளார். "இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் கம்ருதீன் இப்படிப் பேசுவதை எல்லாம் பார்த்தால் இது எல்லாம் சரி என்று நினைத்து ஒரு தலைமுறையே கெட்டுப் போய்விடும் என்று ரவீந்தர் கூறியுள்ளார்.

மரியாதைக் குறைவு

நேற்று வீட்டுத் தலைவரான ரம்யா அமைதியாக உட்காரச் சொன்னதற்குக் கம்ருதீன் மறுத்து பேசியதை ரவீந்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். "நீ எல்லாம் தலைவர், நீயெல்லாம் ஒரு ஆளு, நீ சொன்னா நான் கேட்கணுமா என்பது போன்று இருக்கிறது" என்ற அர்த்தத்தில் கம்ருதீனின் நடவடிக்கை இருப்பதாகச் சொன்னார்.

கோபமான விமர்சனம்

கம்ருதீனின் இந்த புத்திக்குக் செருப்பால அடிக்கணும் என்று ரவீந்தர் உச்சக் கட்ட கோபத்துடன் பேசியுள்ளார். இந்தச் சீசனில் போட்டியாளர்கள் நிகழ்ச்சியின் விதிகளையும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளையும் மதிக்காதது மிகப்பெரிய விமர்சனத்தைக் கொண்டு வந்துள்ளது.

கடந்த சீசன்களில் போட்டியாளர்கள் சண்டைகள், பிரச்சனைகள் நடந்தாலும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை பொறுப்புடன் செய்வார்கள். ஆனால், இந்தச் சீசனில் போட்டியாளர்கள் சண்டை போடுவது மட்டுமல்லாமல் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க்களை சரியாக செய்வதில்லை

மைக்கை ஆஃப் செய்தல்

பார்வதியும் கம்ருதீனும் பேசிக்கொள்ளும் பொழுது தொடர்ச்சியாக மைக்கை ஆஃப் செய்துவிடுகின்றனர். இதற்காக பிக்பாஸ் முதலில் எச்சரித்தார். ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் இதே வேலையைச் செய்ததால் பிக்பாஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

வி.ஜே. பார்வதியும் பிக்பாஸையே மதிக்காமல் சண்டை போட்டு வருகிறார். எஃப்.ஜே.-க்கும் பார்வதிக்கும் மோதல் ஏற்பட்டபோது, பிக்பாஸ் பேசுவதற்காகத் தலைவர் ரம்யா அமைதியாயிருக்கச் சொல்லியும் பார்வதி கேட்கவில்லை - கோபத்தில் எஃப்.ஜே.-விடம் கத்திக்கொண்டே இருந்தார்.

நிகழ்ச்சியின் தரம் குறைந்துவிட்டதால் போட்டியாளர்கள் தங்கள் கேரக்டரை சாதாரணமாக போட்டுவிட்டுப் போகிறார்கள் என்றும் கூறியுள்ளார். ரவீந்தரின் விமர்சனம் இந்தச் சீசனின் உண்மையான தரத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+